பிரிட்டன் உயர்ஸ்தானிகர் பதவிக்கு
ஒஸ்டின் பெர்ணான்டோ?
ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவை பிரிட்டனுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக
நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச சேவையில் நீண்ட அனுபவத்தைக் கொண்ட ஒஸ்டின் பெர்ணான்டோ, பொலனறுவை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அரச அதிபர், தபால்மா அதிபர் ஆகிய பதவிகளை வகித்திருந்தார்.
ஜனாதிபதியின் ஆலோசகராகவும் இதற்கு முன்னர் அவர் பதவி வகித்திருந்ததோடு, கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றினார்.
அத்துடன், ஜனாதிபதி செயலாளராக பதவியேற்கும் வரை, அவர் கிழக்கு மாகாணத்தின் ஆளுநரான பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் பல முக்கிய பதவிகளை வகித்துள்ள இவர்,ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகிப்பதற்கு முன்னர், கிழக்கு மாகாண அரசாங்க அதிபராக இருந்தார்.
ஜனாதிபதியின் செயலாளராக, ஒஸ்டின் பெர்ணான்டோ கடந்த வருடம் ஜுலை மாதம் 4ஆம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருந்தார்.
இவர் நேற்று (06) தமது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிட்டத்தக்கது.
0 comments:
Post a Comment