அமைச்சர் ஹக்கீம் அவர்களால்
சாய்ந்தமருதில் வழங்கப்பட்ட மற்றுமொரு
வாக்குறுதி காற்றில் கலப்பு
கல்முனைப் பிரதேச விளையாட்டு வீரர்களுக்கு அமைச்சர்
ரவூப் ஹக்கீம் கடந்த வருடம் (2017-07-09) ஜூலை மாதம் 9 ஆம் திகதி வழங்கிய உறுதிமொழி ஒன்று
இன்றுடன் ஒரு வருடம் கடந்தும் நிறைவேற்றப்படாது காற்றில் கலந்துவிட்டதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் ஹக்கீம் அவர்களால் சாய்ந்தமருதில் வைத்து “தேசிய ரீதியில் மின்னொளியில் விளையாடக்கூடிய வசதியுள்ள பல விளையாட்டு மைதானங்கள்
இருக்கின்ற போதிலும் கல்முனையில் அவ்வாறான வசதியுள்ள மைதானங்கள் இல்லாதது மிகுந்த குறையாகும்.
இதனை நிவர்த்திக்கும் பொருட்டு இன்னும் ஒரு வருடத்துக்குள் கல்முனையில் பொருத்தமான
ஒரு விளையாட்டு மைதானத்துக்கு மின்னொளியில் விளையாடக்கூடிய வசதிகள் செய்து தரப்படும்’’
என முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கடந்த 2017-07-09 ஆம் திகதி வாக்குறுதி ஒன்றை வழங்கியிருந்தார்.
சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஐந்தாவது ஆண்டு
நிறைவை முன்னிட்டு குறித்த விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
தவிசாளருமான ஏ.எல்.ஏ.மஜீத் தலைமையில் “லீடர் அஷ்ரப் ஞாபகார்த்த கிண்ணம் 2017” கிழக்கு
மாகாணத்தை மையப்படுத்தி 72 விளையாட்டுக்கழகங்கள் தொடராக 6 நாட்கள் 5 ஓவர்களைக் கொண்ட
7 வீரர்கள் பங்குகொண்ட போட்டியின் இறுதி நாளான 2017-07-09 ஆம் திகதி இடம்பெற்ற இறுதிச்
சுற்றுப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் ரவூப் ஹக்கீம்
இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார்.
அமைச்சர் ஹக்கீம் கல்முனைப் பிரதேச விளையாட்டு வீரர்களுக்கு
வழங்கிய இந்த வாக்குறுதி ஒரு வருடம் பூர்த்தியடைந்தும் நிறைவேற்றப்படவில்லை.
காற்றில் கலந்துவிட்ட வாக்குறுதிகளில் இந்த வாக்குறுதியும் கலந்துவிட்டதா? என இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
0 comments:
Post a Comment