உலமாக் கட்சி மற்றும் கருணா
உட்பட 10 சிறு கட்சிகளுடன்
போலி ஒப்பந்தம் செய்து கொண்ட மஹிந்த!
அம்பலமாகும் உண்மை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியுடன் பல சிறு கட்சிகள் நேற்று இணைந்து கொண்டன.

இதில் முபாறக் அப்துல் மஜீதின்  முஸ்லிம் உலமா கட்சி, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) உட்பட 10 சிறு கட்சிகள் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டன. எனினும் நேற்று செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதுவும் செல்லுபடியாகும் ஒப்பந்தங்கள் அல்ல என தெரியவந்துள்ளது.

பொதுஜன பெரமுன கட்சியில் மஹிந்த ராஜபக் உத்தியோகபூர்வமாக உறுப்புரிமை பெற்றுக் கொள்ளாமை மற்றும் அவர் இன்னமும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் என்பதுமே இதற்கான காரணமாகும்.

அவர் சுதந்திர கட்சியில் இருந்து ஒதுங்கி செயற்படுகின்ற போதிலும் அவர் தனது உறுப்புரிமையை கைவிடவில்லை. கடந்த வருடம் திடீர் பிரதமராகிய போதும் மஹிந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமராகவே பதவி ஏற்றுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என்ற காரணத்தினால் அவர் உத்தியோகபூர்வமாக சுதந்திர கட்சியை விட்டு விலகவில்லை.

இந்நிலையில் அவர் முபாறக் அப்துல் மஜீத் மற்றும்  கருணாவின் கட்சி உட்பட 10 சிறு கட்சிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் போலியானது என தெரியவந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியுடன் ஏற்கனவே இணைந்திருந்த கட்சியினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்ததுடன், நேற்றைய நிகழ்வையும் புறக்கணித்துள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான செயற்பாட்டளராக கருதப்படும் பசில் ராஜபக் மற்றும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என எதிர்பார்க்கப்படும் கோத்தபாயவும் நேற்றைய சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top