கல்முனை மாநரசபை வீதிகளில்
பட்டபகலில் வெளிச்சம் போடும்
தெருலாம்புகள்
கல்முனை மாநரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் (GMMS) பாடசாலை வீதியில் பட்ட பகலிலும் தெரு லாம்புகள் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மக்களால் செலுத்தப்படும் வரிப்பணம் எவ்வாறெல்லாம் வீண்விரயம் செய்யப்படுகின்றது என்பதற்கு பட்ட பகலிலும் தெரு லாம்புகள் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பது ஒரு உதாரணமாகும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இது விடயத்தில் கல்முனை மேயர் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என மக்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்
இந்த பதிவில் பதிவேற்றப்பட்டுள்ள படங்கள் நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் எம்மால் க்ளிக் செய்யப்பட்ட படங்களாகும்.
அப்படியானால், நாட்டில் சில பகுதிகளில் வரட்சி நிலவும் நிலையில் மின்சாரத்திற்காக நாடு சிக்கலை எதிர்கொண்டிருக்கும்போது கல்முனை மாநகர சபை எவ்வாறு மின்சாரத்தை பொடுபோக்குத்தனமாகப் பாவிக்கின்றது என்பதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள் அல்லவா?
0 comments:
Post a Comment