கல்முனை நிர்வாக அலகுப் பிரச்சினைகளுக்கு
சமகாலத்தில் தீர்வு:
ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு
சாய்ந்தமருதுக்கு நகரசபை வழங்குவதற்கான
அமைச்சரவைப் பத்திரம் தயாராகவே உள்ளது
எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவிப்பு
கல்முனையில்
தோன்றியுள்ள நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு எந்த தரப்புக்கும் பாதிப்பில்லாத வகையில்
தீர்வுகாண வேண்டிய
பொறுப்பு பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவுக்கு
இருக்கின்றது. ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்துவக்
கட்சிகள் கூட்டணியில்
கைச்சாத்திடும் நிகழ்வு ஓகஸ்ட் 5ஆம் திகதி
நடைபெறவிருப்பதால், அதற்கு முன்னர்
பிரதமர் நல்லதொரு
முடிவை அறிவிப்பார்
என தான்
நம்புவதாக ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் ரவூப்
ஹக்கீம் தெரிவித்தார்.
சாய்ந்தமருதுக்கு
தனியான உள்ளூராட்சி
மன்றம் வழங்குவது
தொடர்பில், சாய்ந்தமருது சுயேச்சைக்குழு
உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகளுடனான பரஸ்பர சந்திப்பு இன்று (24) ரவூப்
ஹக்கீமின் இல்லத்தில்
நடைபெற்றது.
இச்சந்திப்பில்
பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.
ஹரீஸ், கல்முனை
மாநகர சபையின்
சுயேச்சைக்குழு உறுப்பினர்கள், சாய்ந்தமருது
ஜும்ஆ பள்ளிவாசல்
தலைவர் வை.எம். ஹனீபா,
சட்டம் ஒழுங்கு
அமைச்சின் மேலதிக
செயலாளர் ஏ.எல்.எம்.
சலீம் மற்றும்
மு.கா.
சாய்ந்தமருது பிரதிநிதிகளான யஹ்யாகான், அப்துல் பஷீர்,
ஏ.எல்.எம். புர்கான்,
அலியார் நஸார்தீன்,
மன்சூர் பாமி,
எம். முபாரக்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
இங்கு
கருத்து தெரிவித்த
ரவூப் ஹக்கீம்
மேலும் கூறியதாவது;
கல்முனையை
நான்காக பிரித்து
சாய்ந்தமருதுக்கு சபை வழங்கும் தீர்மானம் இருக்கத்தக்க
நிலையில், தற்போது
கல்முனை வடக்கு
பிரதேச செயலக
பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.
பேரினவாத சக்திகளுடன்
இணைந்து இப்பிரச்சினை
தேசிய பிரச்சினையாக
உருமாற்றம் பெற்றுள்ளது. மக்கள் செல்வாக்கை இழந்துள்ள
தமிழ் அரசியல்வாதிகள்
சிலர் இப்பிரச்சினையில்
அரசியல் இலாபம்
தேட முனைகின்றனர்.
அரசாங்கத்துக்கு
எதிராக கொண்டுவரப்பட்ட
நம்பிக்கையில்லா பிரேரணையை சாதகமாகப் பயன்படுத்தி, கல்முனை
வடக்கு பிரதேச
செயலகத்துக்கு கணக்காளர் நியமிப்பதற்கான முஸ்தீபு மேற்கொள்ளப்பட்டது.
அந்த சமயத்தில்
அரசாங்கம் தோற்றுப்போக்கூடாது
என்ற சூழ்நிலை
காணப்பட்டது. நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறுவது அரசாங்கத்துக்கு
மாத்திரமல்ல, அப்போது எங்களுக்கும் பிரச்சினைதான்.
நாங்கள்
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைமையுடன் பேசித்தான் இதற்கு நிரந்தர
தீர்வு காணவேண்டும்.
கல்முனை விடயத்தில்
தமிழ்த்தரப்பு எவ்வளவு தூரம் விட்டுக்கொடுப்பு செய்வார்கள் என்பதுதான் இதிலுள்ள பிரச்சினை.
முஸ்லிம் தரப்பில்
விட்டுக்கொடுப்பு செய்தாலும் அதற்கும் சில எல்லைகள்
இருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் எந்த தரப்புக்கும்
பாதிப்பில்லாமல் தீர்வை பெற்றுத்தர வேண்டிய தார்மீகப்
பொறுப்பு பிரதமருக்கு
இருக்கின்றது.
முன்னைய
ஆட்சியின்போதே கல்முனை பிரச்சினையை தீர்த்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால்,
கல்முனையில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின்
இணக்கப்பாடின்றி சர்வாதிகார ரீதியில் இதற்கு தீர்வுகாண
முடியாது. இந்த
சூழ்நிலையில் எங்களை கைவிட்டு விடவேண்டாமென மருதமுனை
மக்களும் நற்பிட்டிமுனை
மக்களும் இப்போது
கூறத் தொடங்கியுள்ளனர்.
ஏக காலத்திலேயே
இவை எல்லாவற்றும்
தீர்வுகாணப்பட வேண்டும்.
தீர்வுகள்
புத்திசாதுரியத்தால் சாதிக்கப்பட வேண்டும்.
அதைவிடுத்து மக்களை உணர்ச்சிவசப்படுத்தி
தீர்வுகளை பெற்றுக்கொள்ள
முடியாது. இப்படியான
தீர்மானங்கள் இளைஞர் சமுதாயத்துக்கு தவறான முன்னுதாரணமாக
அமைந்துவிடக் கூடாது. தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகுவதிலிருந்து
நாம் தவிர்ந்துகொள்ள
வேண்டும்.
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்புடன்
ஓர் இணக்கப்பாட்டுக்கு
வந்து, கல்முனையிலுள்ள
நிர்வாக ரீதியான
பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும். கல்முனையை
ஏககாலத்தில் நான்காகப் பிரித்து, எல்லாப் பிரச்சினைகளும்
தீர்வுவரும் நேரத்தில் சாய்ந்தமருதுக்கும்
தனியான உள்ளூராட்சி
மன்றம் வழங்கப்படும்
என்றார்.
இங்கு
கருத்து தெரிவித்த
எச்.எம்.எம். ஹரீஸ்
கூறியதாவது;
கல்முனையை
நான்காக பிரிப்பதாக
மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பின்னர், தமிழ்த் தரப்புடன்
பல்வேறு கட்ட
பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. தமிழ்த்தரப்பு
அவர்களுடைய முன்மொழிவுகளை சமர்ப்பித்திருக்கிறார்கள்.
அதேபோன்று நாங்களும்
எங்களது முன்மொழிவுகளை
சமர்ப்பித்திருக்கிறோம். அமைச்சர் வஜிர
அபேவர்த்தனவுடன் இதுதொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றோம்.
நானும்,
தலைவர் ரவூப்
ஹக்கீமும், றிஷாத் பதியுதீனும் பிரதமரின் ஏற்பாட்டில்
அமைச்சர் வஜிர
அபேவர்தனவை சந்தித்து கல்முனை விவகாரம் தொடர்பில்
கலந்துரையாடினோம். இந்தப் பேச்சுவார்தையில்
முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. எங்களது தீர்மானங்களை தமிழ்த்
தேசியக் கூட்டமைப்புக்கு
அறிவிப்பதற்காக அவர் கூறியுள்ளார். விரைவில் இந்தப்
பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படுவதற்கான உத்தரவாதத்தை
அவர் தந்திருக்கிறார்.
சாய்ந்தமருதுக்கு
நகரசபை வழங்குவதற்கான
அமைச்சரவைப் பத்திரம் தயாராகவுள்ளது. கல்முனை வடக்கு
பிரதேச செயலக
பிரச்சினை தீர்க்கப்பட்ட
பின்னர், கல்முனையை
நான்காக பிரித்து
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படும்.
இந்தப் பிரச்சினைகள்
எல்லாவற்றும் ஒரே நேரத்தில் தீர்வுகாணப்படும் என்றார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.