இஸ்லாமிய அடிப்படைவாதத்தை துடைத்தெறிய
பௌத்த பிக்குகள் ஒன்றுபட்டு செயற்பட
வேண்டும்
சிங்கள இளைஞர்களின் கைகளிலேயே
நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது
- இப்படி கூறுகின்றார் ஞானசாரர்
சிங்கள
இளம் தலைமுறையினர்
அனைவரும் பௌத்த
மதத்தினை முழுமையாக
முறையாக பின்பற்ற
வேண்டும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாட்டில் இருந்து முழுமையாக துடைத்தெறிய வேண்டுமாயின்
பௌத்த பிக்குகள் அரசியல் பேதங்களைத் துறந்து பௌத்த சாசனத்திற்கு அமைய ஒன்றுபட்டு செயற்பட
வேண்டும் எனவும் என பொதுபல சேனா
அமைப்பின் பொதுச்
செயலாளர் கலகொடே
அத்தே ஞானசார
தேரர் தெரிவித்துள்ளார்.
கலென்பிந்துனுவெவ
பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுபலசேனா அமைப்பின் மக்கள்
சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே
அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.
கலகொடே
அத்தே ஞானசார தேரர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பௌத்த
மதத்தின் மரபுரிமைகளும்,
கோட்பாடுகளும் பாதுகாப்பப்பட வேண்டுமாயின்
சிங்கள இளம்
தலைமுறையினர் அனைவரும் பௌத்த மதத்தினை முழுமையாக
முறையாக பின்பற்ற
வேண்டும்.
அத்துடன்,
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை
நாட்டில் இருந்து
முழுமையாக துடைத்தெறிய
வேண்டுமாயின் பௌத்த பிக்குகள் அரசியல் பேதங்களைத்
துறந்து பௌத்த
சாசனத்திற்கு அமைய ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்
எனவும் அவர்
குறிப்பிட்டார்.
மேலும்,
“பௌத்த நாட்டின்
மரபுரிமைகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றது.
அரசியல்வாதிகள்
அனைவரும் ஆட்சியில்
இருக்கும் காலத்தில்
எவ்வளவு நிதி
சேமித்துக் கொள்ளலாம் என்று மாத்திரமே நினைக்கின்றார்கள்.
அவர்கள்
நாடு தொடர்பாக
எவ்வித அக்கறையும்
கொள்வது கிடையாதுதற்போது
நாடு எதிர்கொண்டுள்ள
சவால்களுக்கு பௌத்த மத பிக்குகளினால் மாத்திரமே
தீர்வு வழங்க
முடியும்.
அரசியல்வாதிகள்
தயவு செய்து
விலகிக்கொள்ள வேண்டும்.பௌத்த மத சாசனத்திற்கு
அமைய அனைத்து
பிக்குகளும் அரசியல் பேதங்களைத் துறந்து ஒன்றுபட
வேண்டும். சிங்கள
இளைஞர்களின் கைகளிலே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது
என்று அவர்
தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment