பாடசாலைகளுக்கு 2ஆம் தவணை விடுமுறை



இவ்வாண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, அரச தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஓகஸ்ட் 01 ஆம் திகதி நிறைவடைவதோடு, அப்பாடசாலைகளின் மூன்றாம் தவணை செப்டெம்பர் 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கல்வயமைச்சு இதனை அறிவித்துள்ளது.

இதேவேளை, உயர் தரம் தவிர்ந்த முஸ்லிம் பாடசாலைகள் ஓகஸ்ட் 09 ஆம் திகதி நிறைவடைவதோடு, ஓகஸ்ட் 15 ஆம் திகதி மூன்றாம் தவணை  ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வருடம் .பொ.. உயர் தர பரீட்சை ஓகஸ்ட் 05 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 2,678 பரீட்சை நிலையங்களில், 37,704 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நாளை (30) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை, .பொ.. உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, நாளை மறுதினம் (31) நள்ளிரவு முதல் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top