சாய்ந்தமருதில் பழுதடைந்துள்ள பாலங்களை
புனர்நிர்மாணம் செய்வதற்கு
நமது பிரதிநிதி நடவடிக்கை எடுப்பாரா?
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழைய ஆஸ்பத்திரி வீதி பாலம், அல்- ஹிலால் வடக்கு வீதி பாலம், மாளிகா வீதி பாலம், பொலிவேரியன் கிராம பாலம் என்பன சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.
பழைய ஆஸ்பத்திரி பாலம், அல் ஹிலால் வடக்கு வீதி பாலம், மாளிகா வீதி பாலம் என்பன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் . மர்ஹும் . எம்.சி.அஹமட் அவர்களினால் 1972ல் நிருமாணிக்கப்பட்ட வை.
பொலிவேரியன் பாலம் 1990 காலத்தில் முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர். மன்சூர் காலத்தில் நிருமாணிக்கப்பட்டது.
மேற்படி பாலங்களை அரசின் கிராமிய பால அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நமது மக்கள் பிரதிநிதி புனர்நிர்மாணம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா?
-
Mohamed Mukthar
0 comments:
Post a Comment