சம்மாந்துறை, நிந்தவூர் பிரதேசங்களில்
கைப்பற்றப்பட்ட வெடிப் பொருட்கள் தொடர்பில்
தகவல் வழங்கியவருக்கு
ஜனாதிபதி 50 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பு

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் சம்பந்தமாக முக்கியமான தகவல்களை வழங்கிய, வாகன சாரதிக்கு 50 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (24) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கினார்.
இவர் வழங்கிய தகவல் காரணமாகவே கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி சம்மாந்துறை செனகல் கிராமத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப் பொருட்கள் மற்றும் சம்மாந்துறை நிந்தவூர் பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப் பொருட்களை கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

பதிற் கடமை பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top