அதாவுல்லாவினால் கொண்டுவரப்பட்ட
கல்முனை எல்லையை மு. காங்கிரஸை
வைத்தே தடுத்தோம்
இனவாத கருத்துக்களை கக்கும் கோடீஸ்வரன் எம் பி.



முஸ்லிம் சமூகத்தை ஆளுகின்ற சக்தி எம்மிடம் உண்டு அதனால் தான் நாம் கடந்த ஆட்சியில் அதாவுல்லாஹ் அவர்களினால் கொண்டுவரப்பட்ட கல்முனை எல்லையை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வைத்தே தடுத்தோம் என்று தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், கல்முனையை அதாவுல்லாஹ்வின் வரைபில் பிரிக்கவிடாமல் தடுத்தது எங்களுக்கு கிடைத்த ஆகப்பெரிய வெற்றி, அதனை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டே நடாத்தினோம், அவ்வாறு இல்லாவிட்டிருந்தால் நாம் அவர்களுக்கு அடிமையாக வாழ்ந்திருப்போம். இதுதான் எமது ராஜ தந்திரம்.

தேர்தலில் கூட .தே.கூ கூறும் அணிக்கே முஸ்லிம் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும். தற்போது கல்முனை வடக்கு சபை எல்லைகள் எம்மால் வரையப்பட்டவை. நாம் தான் ராஜா. அங்கே அதாவுல்லாஹ் என்பவரினால் வரையப்பட்ட எல்லை எம்மை வந்தேறு குடிகளாக வைத்திருக்கும். அதனால் தான் எமது தலைமை அதற்கான மாற்று வழியை நாடியது.

அதாவுல்லாவின் எல்லைகள் எமக்கு மிகவும் பாதகம், அவரின் கனவை தவிடு பொடியாக்கியுள்ளோம். தற்போது கல்முனை சபை எல்லைகள் எம்மால் வரையப்பட்டவை. அவற்றுக்கே முஸ்லிம் அமைச்சர்கள் அனுமதியும் வழங்கியுள்ளார்கள். எமது ஆலோசனையின் பெயரிலேயே ஹிஸ்புல்லாஹ்வை பதவியில் இருந்தும் தூக்கி எறிந்தோம்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட நாம் அமைத்த வரைபுகள் சான்று. அதாவுல்லாஹ் ஹிஸ்புல்லாஹ் ஆகிய இருவரையும் எமது கூட்டமைப்பின் திட்டத்தின்படியே விரட்டப்பட்டது. அது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் நீண்ட நாள் கனவு, இறுதியில் எம்மாலே நனவானது.

அவர்களின் ஊரை வைத்தே அவர்களை நாம் தோற்கடித்தோம். இனி அவர்கள் பாரளுமன்றம் போகாதவாறும் எமது அடுத்த நகர்வுகள் இடம் பெறும், ஆகவே கிழக்கு தமிழர்கள் தமிழ் கூட்டமைப்புடன் மாத்திரமே இனைந்து பயணிக்க வேண்டும், அதுவே எமது உரிமைகளை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் ஆதரவான வழி.

எமது வர்த்தகத்தில் நாம் கொண்டிருக்கும் வீழ்ச்சியை சரிசெய்ய எமது வியாபார நிலையங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும், என்றும் தெரிவித்தார்.

திருக்கோவில் வர்த்தக சங்கத்துடன் புதன்கிழமை இரவு நடைபெற்ற இராப்போசனத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சக்திவேல் சரவணன் (BA)
திருக்கோவில்

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top