இந்தியாவில் வழிபாட்டுக்குச்
 சென்றுள்ள பிரதமர் ரணில்
கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வழிபாடு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு நேற்று சென்றுள்ளார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர். அங்கு மூகாம்பிகையை வழிபட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை மக்களின் நலனுக்காக நவசண்டிகா ஹோமமும் நடத்தினார்.

முன்னதாக மங்களூரு விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அவர் கோவிலை சென்றடைந்தார். அந்த பகுதியில் கனமழை பெய்ததால் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வருகையையொட்டி கொல்லூரில் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. தனியார் வாகனங்கள் கொல்லூர் நகரில் நுழைய அனுமதிக்கப்படவில்லை.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top