எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவுடன்
அமெரிக்க தூதுவர் இன்று சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஹெலைய்னா டெப்லிட்ஸிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
கொழும்பு, விஜேராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மஹிந்த ராஜபக்ஸவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
அமெரிக்க தூதரகத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் உட்பட சில விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் அமெரிக்காவுடன் இலங்கை செய்துக்கொள்ள உள்ளதாக கூறப்படும் சோபா மற்றும் எக்ஸா உடன்படிக்கைகள் தொடர்பாக பொதுஜன பெரமுன உட்பட கூட்டு எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் வேளையில், மஹிந்த ராஜபக்ஸவுடனான சந்திப்பில் இந்த விடயம் குறித்தும் அமெரிக்க தூதுவர் பேசியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment