அவசரகாலச் சட்டம் மேலும்
ஒரு மாத காலம் நீடிக்கப்பட்டது
வர்த்தமானியும் வெளியானது.
முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளிடம்
ஜனாதிபதி கடந்த 9 ஆம் திகதி இரவு
வழங்கிய உறுதிமொழி என்னவாயிற்று?
மக்கள் கேள்வி
அவசரகாலச் சட்டம் இன்று 22 ஆம் திகதி தொடக்கம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் ஜனாதிபதியின் செயலாளரின் ஒப்பத்துடன் வெளியானது.
இதேவேளை, நாட்டில்
அமுலில் இருக்கும்
அவசரகாலச் சட்டத்தை,
இனியும் நீடிக்கப்போவதில்லை
என்று, ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன கடந்த 9 ஆம் திகதி
இரவு முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளிடம் உறுதியளித்திருந்தார்.
ஜனாதிபதிக்கும்
அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன்,
ஏ.எச்.எம். பௌஸி,
ஸ்ரீ லங்கா
சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர்
முஸ்தபா உள்ளிட்ட
ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
மற்றும் அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸ் கட்சிகளின்
எம்.பிக்களுக்கும்
இடையிலான சந்திப்பொன்று,
இடம்பெற்றிருந்தது.
இதன்போது,
நாட்டில் அமுலில்
இருக்கும் அவசரகாலச்
சட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும்
இலக்கு வைக்கப்படுவதாகவும்
துன்புறுத்தப்படுவதாகவும், ஜனாதிபதியிடம் அவர்களால்
எடுத்துரைக்கப்பட்டது.
இதன்போதே,
அவசரகாலச் சட்டத்தை
இனியும் நீடிக்கும்
எண்ணமில்லை என்று, ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.
இது மாத்திரமல்லாமல் மகப்பேற்று வைத்தியர் ஷாபி, குற்றமற்றவர்
என்று, அவர் தொடர்பான விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள்
எடுக்கப்படுமென்றும், ஜனாதிபதியினால் இதன்போது உறுதியளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment