கல்முனை பிரதேச செயலக விவகாரம்
சந்திப்புக்கள் பற்றி கல்முனை பள்ளிவாசல்,
புத்திஜீவிகளுக்கு ஹரீஸ் எம்.பி விளக்கம்!
கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்புக்கள் தொடர்பில் விளக்கமளிக்கு முகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சமுமான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் உள்ளிட்ட புத்திஜீவிகளுடனான சந்திப்பு நேற்று (27) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் சந்திப்பு தொடர்பில் தெரிவிக்கையில்,
கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற அமைச்சர் வஜிர அபேவர்தனவுடனான சந்திப்பு, எல்லை நிர்ணய குழுவுடனான சந்திப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு மற்றும் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினருடனான சந்திப்பு என்பன பற்றி மேற்படி குழுவினருக்கு விளக்கிக் கூறினார்.
மேலும் சமகால அரசியல் அதாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு தரும் அழுத்தம் தொடர்பிலும் சபைக்கு எடுத்துக் கூறினார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அரசாங்கத்திடம் முஸ்லிம் சமூகம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கல்முனை, தோப்பூர், வாழைச்சேனை பிரதேச செயலகம் தொடர்பில் இறுதித் தீர்வுக்கு வருதல், திகன, மினிவாங்கொட , குருநாகல் பிரதேசங்களில் இனவாத தாக்குதலினால் பாதிக்கப்ட்ட முஸ்லிம் மக்களுக்கு நஷ்டஈடு வழங்கல், சமூகத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் பட்சத்தில் மாத்திரமே அமைச்சுப் பதவிகளை ஏற்பது என்ற தீர்மானத்தையும் சபைக்கு தெரிவித்தார்.
இதன்போது கல்முனை பிரதேச செயலக எல்லை நிர்ணயம் தொடர்பில் கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் உள்ளிட்ட புத்திஜீவிகள் ஊடகங்களுக்கு வெளியிடாதவாறு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.