இதயங்களை கனமாக்கும் புகைப்படம்!

இதயங்களை கனமாக்கி உலகையே உலுக்கும் புகைப்படம் ஒன்றை தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனரான ஜெஸ்டின் சுலிவான் வெளியிட்டுள்ளார்

ஜெஸ்டின் சுலிவான் அண்மையில் போட்ஸ்வானா பகுதியின் வனப்பகுதிக்குச் சென்றபோதே இந்த துயரமான புகைப்படத்தை எடுத்துள்ளார்.

குறித்த வனப்பகுதியில் உள்ள விலங்குகளின் அரியவகை புகைப்படங்களை எடுக்க பல்வேறு விதமான நவீன புகைப்பட கருவிகளுடன் சென்ற அவர் வனத்தில் ஏதேனும் அரிய காட்சிகள் உள்ளனவா? என்பதை கவனிக்க டிரோனை பறக்கவிட்டு இயக்கினார்.

சிறிது நேரம் பறந்த டிரோன், ஓர் துயர காட்சியை காண்பித்தது. அந்த காட்சியில் யானை ஒன்று, தும்பிக்கை தனியாகவும் உடல்பகுதி தனியாகவும் துண்டிக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு ஜெஸ்டின் கடும் அதிர்ச்சிக்குள்ளானர்.

பின்னர் சரியாக புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படம்தான் இப்போது பார்ப்பவர்களின் இதயங்களை கனமாக்கி வருகிறது. இது குறித்து ஜெஸ்டின் கூறுகையில், ‘இந்த புகைப்படத்துக்குடிஸ்கனெக்ஷன்என பெயரிட்டுள்ளேன்.

  
இந்த பெயர் யானை-தும்பிக்கைக்கு இடையேயான முறிவை பற்றியது மட்டுமல்ல, விலங்குகள் வேட்டையாடப்படுவதற்கும், அவற்றை கண்டு கொள்ளாத எமக்கும்தான் இந்த புகைப்படத்தின் வலி மேலே இருந்து எடுத்ததால் நன்றாக புரியும்என கூறியுள்ளார்.

போட்ஸ்வானாவில் 5 ஆண்டுகளாக யானைகள் வேட்டையாடப்படும் சட்டம் தடையில் இருந்தது. இந்த தடை, கடந்த மாதம்தான் திரும்பப்பெறப்பட்டது. இதனால், இப்போது இதுபோன்ற துயர சம்பவம் அரங்கேறியுள்ளதாக விலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top