குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று
வைத்தியர் ஷாபியின் அடிப்படை உரிமை மனு
ஆகஸ்ட், 6ஆம் திகதி விசாரணைக்கு
குருநாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் மொஹமட் ஷியாப்தீனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை கவனத்தில் கொள்வது எதிர்வரும் 6 ஆம் திகதி வரையில் ஒத்தி வைப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
இந்த மனு மூவரைக் கொண் நீதியரசர்கள் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இது குறித்து அறிவிக்கப்பட்டது. நீதியரசர்களான புவனேகா அலுவிஹாரே எல்ட்டி பி தெஹிதெனிய மற்றும் பி.பத்மன் சூரசேன ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
சட்டமா அதிபரின் சார்பில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் ஆஜராகியிருந்தார் . இந்த மனுவின் சில பிரதிவாதிகளுக்கான அறிவிப்பு கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார். இதற்கமைவாக இந்த மனுவை கவனத்திற்கொள்வது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment