30.07.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவையில்
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
1. தேர்தல்
ஆணைக்குழுவிற்காக புதிய வாகனங்களை கொள்வனவு செய்தல்
(நிகழ்ச்சி நிரலில் 7 ஆவது விடயம்)
தேர்தல்
ஆணைக்குழு இதுவரையில்
2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் தேசிய மட்டத்தில்
தேர்தலை நடத்துவதற்கு
தேவையான நடவடிக்கைகளை
திட்டமிட்டு வருகின்றது. இதற்கமைவாக எதிர்காலத்தில் நடைபெறவுள்ள
தேர்தல்களை செயல்திறன் மிக்கதாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றக்கூடிய
வகையில் இந்த
ஆணைக்குழுவிற்கு 14 கெப் வாகனங்கள்
மற்றும் வேன்
ஒன்றையும் கொள்வனவு
செய்வதற்குத் தேவையான நிதியை பெற்றுக் கொடுப்பதற்காக
பிரதமர் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2. மிஹிந்தலையை
தேசிய மரபு
உரிமையாக பிரகடனப்படுத்தல்
(நிகழ்ச்சி நிரலில் 8 ஆவது விடயம்)
விசேட
பிங்கம மற்றும்
சம்பிரதாயங்களுடன் பொசொன் நோன்மதி
வைபவத்தை தேசிய
வைபவமாக கொண்டாடும்
பொழுது ஏற்படக்கூடிய
சிரமங்களை குறைப்பதற்காக
தற்பொழுது வழங்கப்படும்
அரச அனுசரனைக்கு
அமைவாக உயர்
பங்களிப்பு அரசாங்கத்தினால் வழங்கப்படுவது
அத்;தியாவசியமானது
என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக மிஹிந்தலையை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்துவது
பொசொன் வாரம்
மற்றும் மிஹிந்தலை
பெரஹெரவை தேசிய
வைபவமாக பிரகடனப்படுத்துவதற்கும்
மிஹிந்தலை பொசொன்
பெரஹெரவிற்காக வருடாந்தம் நிதியை வழங்குவதற்கும் புத்தசாசன
மற்றும் வடமேல்
மாகாண அபிவிருத்தி
அமைச்சரினால் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமர்
சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
3. 1982 ஆம் ஆண்டு இல 41 கீழான
தேசிய விலங்கியல்
பூங்கா சட்டத்தில்
திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 14 ஆவது
விடயம்)
1982ஆம் ஆண்டு இல 41 கீழான
தேசிய விலங்கியல்
பூங்கா தேசிய
விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் தற்போதைய பணிகளுக்கும்
நிறுவன கட்டமைப்புக்கும்
பொருந்தும் வகையில் திருத்தத்தை மேற்கொள்ளவேண்டும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைவாக மாற்று (இயற்கை சுற்றாடலுக்கு அப்பால்)
விலங்குகளுக்கு பாதுகாப்பு பணிகள் மற்றும் விலங்குகளுக்கான
வேலைத்திட்டங்கள் ஆய்வு ரீதியில் மேற்கொள்வதற்கு உள்ள
உடனடி வரையறை
என்பதை நீக்கி
தற்பொழுது மற்றும்
உத்தேச புதிய
செயற்பாடுகளுக்கு பொருந்தும் வகையில் 1982ஆம் ஆண்டு
இல 41 கீழான
தேசிய விலங்கியல்
பூங்கா சட்டத்தில்
திருத்தத்தை மேற்கொள்வதற்காக திருத்த சட்டமூலம் வரைவுக்கு
சமர்ப்பிப்பதற்காக சுற்றுலாத்துறை அபிவிருத்தி
வனவிலங்கு மற்றும்
கிறிஸ்தவ மத
அலுவல்கள் அமைச்சர்
சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
4. திரிபோசா
தயாரிப்புக்குத் தேவையான அடிப்படை மூலப்பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கு
2 தானிய களஞ்சியங்களை
நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 21 ஆவது விடயம்)
திரிபோசா
தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்காக
இலங்கை திரிபோசா
நிறுவனத்திற்கு தற்பொழுது 1,200 மெற்றிக் தொன் கொள்ளளவைக்
கொண்ட சிறிய
களஞ்சியம் மட்டுமே
உண்டு. இதற்கமைவாக
திரிபோசா மற்றும்
கலப்பட Eutrophication தயாரிப்பை தொடர்ச்சியாக
முன்னெடுப்பதற்காக சோளம் மற்றும்
சோயா போஞ்சி
அறுவடையில் மேலதிகமாக கிடைக்கும் சந்தர்ப்பதில் இந்த
மூலப்பொருட்களை களஞ்சியப்படுத்தக்கூடிய வகையில்
தேவையான இடவசதிகளை
மேற்கொள்வதற்காக இலங்கை திரிபோசா நிறுவனத்தின் நிதியத்தை
பயன்படுத்தி 4,000 மெற்றிக் தொன்
கொள்ளளவைக்கொண்ட 2 களஞ்சியங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதற்காக சுகாதார
போஷாக்கு மற்றும்
சுதேசிய வைத்தியதுறை
அமைச்சர் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
5. தேசிய
கூட்டுறவுக் கொள்கை (நிகழ்ச்சி நிரலில் 24 ஆவது
விடயம்)
உத்தேச
தேசிய கூட்டுறவுக்
கொள்கை தொடர்பில்
பொது மக்களின்
கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக இதற்கு
முன்னர் அமைச்சரவையினால்
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக
சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்துகள் மற்றும்
பரிந்துரைகளை கவனத்திற் கொண்டு வகுக்கப்பட்டுள்ள திருத்த தேசிய கூட்டுறவுக் கொள்கையை
நடைமுறைப்படுத்துவதற்காக பதில் கைத்தொழில்
மற்றும் வர்த்தக
அலுவல்கள் நீண்டகாலம்
இடம்பெயர்ந்த நபர்களை மீளக்குடியமர்த்தல்
கூட்டுறவு அபிவிருத்தி
மற்றும் தொழில்
பயிற்சி மற்றும்
திறனாற்றல் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
6. ஹோமாகம
பிட்டிபன மாஹேன
வத்தையில் அமைந்துள்ள
காணியின் ஒரு
பகுதியை அளவீடு
அலகு தர
மற்றும் சேவைத்
திணைக்களத்திற்கும் கல்வி வெளியீட்டுத்
திணைக்களத்திற்கும் இலங்கை வெளிநாட்டு
வேலை வாய்ப்பு
பணியகத்திற்கும் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்கும் பிரித்து கொடுத்தல் (நிகழ்ச்சி நிரலில்
27 ஆவது விடயம்)
நகர
அபிவிருத்தி அதிகார சபையினால் விஞ்ஞானம் மற்றும்
தொழில் நுட்பத்துறை
அபிவிருத்தி பணிகளை மேம்படுத்துவதற்கும்
அதனுடன் தொடர்புபட்ட
நிறுவனங்களை அமைப்பதற்குமாக ஹோமாகம பிட்டிபன மாஹேன
வத்தை என்ற
இடத்தில் உள்ள
34.04 ஹெக்டர் காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காணிகளில்
தேசிய அளவீட்டு
ஆய்வு நிலையமொன்றை
ஸ்தாபிப்பதற்காக அளவீட்டு அலகு தர சேவை
திணைக்களத்திடமும் பாடநூல் களஞ்சிய
கட்டிடத் தொகுதியொன்றை
நிர்மாணிப்பதற்காக கல்வி வெளியீட்டுத்
திணைக்களத்திற்கும் பயிற்சி மத்திய
நிலையமொன்றை அமைப்பதற்காக இலங்கை வெளிநாட்டு வேலை
வாய்ப்பு பணியகத்திற்கும்
தரவு மத்திய
நிலையமொன்றை நிர்மாணிப்பதற்காக இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குமாக
காணியை வழங்குவதற்காக
மாநகர மற்றும்
மேல்மாகாண அபிவிருத்தி
அமைச்சர் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
7. இலங்கையில்
சீனி தயாரிப்பை
மேம்படுத்துவதற்காக 'உக் போகய'
என்ற கரும்பு
உற்பத்தியை முக்கிய பெருந்தோட்ட உற்பத்தி என்ற
ரீதியில் பெயரிடல்
(நிகழ்ச்சி நிரலில் 30 ஆவது விடயம்)
இலங்கையில்
தற்போதைய சீனி
பாவனை வருடாந்தம்
670,000 மெற்றிக் தொன்னாகும். இந்த தேவையில் 90 சதவீதமானவை
இறக்குமதி மூலமே
பூர்த்தி செய்யப்படுகிறது.
இதற்காக வருடமொன்றிற்கு
செலவிடப்படும் நிதி 350 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்
மேலும் 2020ஆம் ஆண்டளவில் சீனியின் தேவை
700,000 மெற்றிக் தொன்களாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன்
இந்த தேவையை
பூர்த்தி செய்யும்
வகையில் கரும்பை
உற்பத்தி செய்வதற்காக
மொனராகலை கிளிநொச்சி
மட்டக்களப்பு அநுராதபுரம் திருகோணமலை அம்பாறை பதுளை
மற்றும் பொலன்நறுவை
ஆகிய மாவட்டங்களில்
104,000 காணிகள் அடையாளங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக
இலங்கையின் முக்கிய பெருந்தோட்ட பயிராக 'உக்
போகய' என்று
(கரும்பு உற்பத்திக்கு)
பெயரிடுவதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர்
சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
8. தேசிய
நீர்வள ஆய்வு
மற்றும் அபிவிருத்தி
பிரதிநிதி நிறுவனமாக
(நாரா) மற்றும்
பிரிட்டனின் நீர் பரப்பிற்குரிய Hydro
graphic அலுவலகத்திற்கிடையிலான
புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அங்கீகாரம்
வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 33 ஆவது விடயம்)
இலங்கையில்
கடல்வலையத்தின் ஊடாக பயணிக்கும் கப்பல்கள் பாதுகாப்பான
முறையில் பயணிப்பதற்காக
புதுப்பிக்கப்பட்ட கடற்படை தகவல்களை
வழங்குவது தொடர்பில்
பிரிட்டனின் நீர் பரப்பிற்குரிய Hydro
graphic அலுவலகத்துடன் 2002ஆம் ஆண்டில்
இருதரப்பு உடன்படிக்கை
எட்டப்பட்டதுடன் தற்பொழுது செல்லுபடியான தன்மை அமைவது
இந்த உடன்படிக்கைக்காக
2005ஆம் ஆண்டில்
மேற்கொள்ளப்பட்ட திருத்தமாகும். மேலும் தேசிய நீர்
வள ஆய்வு
மற்றும் அபிவிருத்தி
பிரதிநிதி நிறுவனத்தினால்
இலத்திரனியல் பயன்பாடு வரைபடத்தை தயாரித்தல் மற்றும்
விநியோகித்தலுக்காக தற்போதைய நீர்
பரப்பிற்குரிய Hydro graphic அலுவலகத்திற்கு 2013ஆம் ஆண்டில் உடன்படிக்கை மூலம்
அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை
தொடர்பில் அச்சு
மற்றும் இலத்திரனியல்
கடற்படை வரைபடங்களை
தயாரித்தல் விநியோகிப்பதற்கான அதிகாரத்தை
இலங்கைக்கு பெற்றுக் கொள்ளும் வகையில் நிறைவேற்றப்பட்ட
கடற்படை வரைபடம்
இலத்திரனியல் கடற்படை வரைபடங்களை தயாரிப்பதற்கும் அவற்றை
விநியோகிப்பதற்குமான ஒப்பந்தத்தில் திருத்ததங்களை
மேற்கொள்வதற்காக விவசாய கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம்
மற்றும் கடற்றொழில்
மற்றும் கடல்
வள அபிவிருத்தி
அமைச்சர் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
9. நீர்பாசனத்
திட்டம் அமைக்கப்பட்ட
கால்வாய் மற்றும்
கங்கை உள்ளிட்ட
ஓடைகளுக்காக நீர்பாசன பாதுகாப்பு திருத்தத்தை மேற்கொள்ளுதல்
மற்றும் ஓடைகளை
புனரமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 34 ஆவது விடயம்)
நீர்பாசன
நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்குத் தேவையான நீர்பாசன சேமிப்பு பாதுகாக்கப்படுவதன்
தேவையை அடையாளங்
காண்பதற்கும் அது தொடர்பில் நிரந்தரமான வேலைத்திட்டமொன்றை
வகுத்தல் தொடர்பில்
கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு தற்பொழுது
நடைமுறையில் உள்ள நீர்பாசன பாதுகாப்பு நடைமுறையில்
திருத்தத்தை மேற்கொண்டு எதிர்கால தேவைக்கு பொருந்தும்
வரையறை அடையாளங்
காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக நீர்பாசன நடவடிக்கை நிர்மாணம்
மற்றும் நதி
கால்வாய்களுக்காக உத்தேச புதிய பாதுகாப்பு மற்றும்
காப்பக காணி
வரையறைகளை சட்டமா
அதிபரின் உடன்பாட்டின்
அடிப்படையில் தற்போதைய நீர்ப்பாசன கட்டளை சட்டத்திற்கு
அமைவாக கட்டளையாக
வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்துவதற்கும்
அதனைத் தொடர்ந்து
அந்த உத்தரவுகளை
பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக விவசாய கால்நடை வள
அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும்
கடல் வள
அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. மார்ச் 21ஆம்திகதியை நில அளவைத்
தினமாக பிரகடனப்படுத்துதல்
(நிகழ்ச்சி நிரலில் 38ஆவது விடயம்)
ஆகஸ்ட்
மாதம் 2ஆம்
திகதியை தேசிய
நில அளவை
தினமாக பிரகடனப்படுத்துவதற்கு
அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன்
சர்வதேச நில
அளவை அமைப்பினால்;
சர்வதேச நில
அளவை தினமாக
மார்ச் மாதம்
21ஆம் திகதி
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதற்கு
சமமான வகையில்
ஒவ்வொரு வருடமும்
மார்ச் 21ஆம்
திகதியை நில
அளவை தினமாக
பிரகடனப்படுத்துவதற்காக காணி மற்றும்
பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
11. பிராந்திய வணிக விமான சேவைகளை
முன்னெடுப்பதற்காக உள்ளுர் விமான
நிலையங்களை திறத்தல் (நிகழ்ச்சி நிரலில் 40 ஆவது
விடயம்)
கடந்த
சில வருடங்களில்
உள்ளக விமான
சேவையை மேம்படுத்துவதற்காக
அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் கீழ் மட்டக்களப்பு விமான
நிலையத்தை அபவிருத்தி
செய்யவும் இரத்மலானை
விமான நிலையத்தை
சிவில் விமான
நிலையமாக வசதி
செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு பலாலி
விமான நிலையத்தை
அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக சம்பந்தப்பட்ட தரத்திற்கு அமைய
வெளிநாட்டு விமானத்தில் பயணத்தை மேற்கொள்ளும் பிராந்திய
வணிக சேவை
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த விமான நிலையங்களில்
உறுதிசெய்யுமாறு இலங்கை சிவில் விமான சேவை
அதிகார சபைக்கு
ஆலோசனை வழங்குதல்
மற்றும் இந்த
விமான நிலையங்களில்
சட்ட ரீதியில்
பணிகளை மேற்கொள்வதற்காக
தேசிய எல்லை
நிர்வாக விதிமுறைகளை
தயாரிப்பதற்காக சிவில் போக்குவரத்து மற்றும் விமான
சேவைகள் அமைச்சர்
சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கிடையில் இருதரப்பு விமான சேவை உடன்படிக்கை
(நிகழ்ச்சி நிரலில் 42 ஆவது விடயம்)
2018 ஆம் ஆண்டில் கென்யா நைரோபியில்
நடைபெற்ற சர்வதேச
சிவில் விமான
சேவை இணக்கப்பாட்டு
பேச்சுவார்த்தை மகாநாட்டின் போது இலங்கை மற்றும்
நெதர்லாந்துக்கிடையில் விமான சேவை
நடவடிக்கைக்கான செயற்பாடுகள் குறித்து உடன்பாடு எட்டப்பட்டதுடன்.
இருநாடுகளுக்கு இடையில் விமான சேவை உடன்படிக்கைக்காக
சுருக்கமான உடன்பாடு எட்டப்பட்டது. இதன் மூலம்
தெரிவிக்கப்பட்டுள்ள விமான வழியில்
இலங்கைக்கும் இலங்கையிலிருந்து பயணத்தை மேற்கொள்வதற்கு நெதர்லாந்தின்
KLM Royal Dutch விமான சேவை மற்றும்
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் பெயரிடப்பட்டுள்ளன. இதற்கமைவாக இலங்கை மற்றும் நெதர்லாந்து
அரசாங்கத்திற்கிடையில் அடிப்படை பேச்சுவார்த்தையில்
அதிகாரிகள் மட்டத்தில் உடன்பட்டுள்ள விடயங்களில் விமான
சேவை உடன்படிக்கையை
எட்டுவதற்காகவும் இதன் உடன்படிக்கை பயனுள்ள வகையில்
நடைமுறைப்படுத்தவதற்கு பொருத்தமான நடவடிக்கையை
மேற்கொள்வதற்கும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான
சேவைகள் அமைச்சர்
சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. பொதுநலவாய ஒன்றியத்தின் நீதியமைச்சர்களின் கூட்டம் (CLMM) அனுசரணை நாடாக செயற்படுதல்
2019 (நிகழ்ச்சி நிரலில் 43ஆவது விடயம்)
பொது
நலவாய ஒன்றியத்தின்
நீதி அமைச்சர்களின்
கூட்டத்தை இலங்கையில்
நடத்துவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம்
வழங்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக
நேரிய செயலாட்சிக்கு
சமமான இயக்கம்
மற்றும் சட்டத்தின்
சட்டவாட்சி என்ற தொனிப்பொருளில் இந்த கூட்டத்தை
ஏற்பாடு செய்து
நடத்துவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
அமைச்சர் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. அடிப்படை யாப்பை ஒன்றிணைத்தல் குற்றவியல்
சட்ட நிதிதொகுப்புக்கான
திருத்தம் (நிகழ்ச்சி நிரலில் 46 ஆவது விடயம்)
அடிமைப்படுத்தப்பட்ட
காலப்பகுதியில் விதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில்
திருத்தப்பட்டுள்ள குற்றவியல் நிதிதொகுப்பு
சட்டத்தில் சில சொற்கள் மற்றும் பயன்பாடு
1972ஆம் ஆண்டு
குடியரசு அரசியல்
யாப்பில் நிறைவேற்றப்பட்ட
பின்னரும் தற்போதைக்குப்
பொருத்தமற்றதாக அமைந்துள்ளது. இவ்வாறு காலம் கடந்த
சில சொற்கள்
மட்டும் பயன்பாட்டிற்காக
தற்பொழுது பொருத்தமான
சொற்கள் மற்றும்
பயன்படுத்துவதற்கு மாற்றீடாக மேற்கொள்வதற்காக
சட்ட திருத்த
வரைவு பிரிவினால்
தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்ட
மூலத்தை அரசாங்கத்தின்
வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதன் பின்னர் அனுமதிக்காக
பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் சிறைச்
சாலைகள் மறுசீரமைப்பு
அமைச்சர் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியள்ளது.
15. கொழும்பு பல்கலைக்கழகத்தின்
உத்தேச போதனை
வலயத்திற்கான கட்டிடத்தை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில்
57 ஆவது விடயம்)
கொழும்பு
பல்கலைக்கழகத்தில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள போதனை
வலயத்தை நிர்மாணிப்பதற்கான
ஒப்பந்தத்தை 520 மில்லியன் ரூபாவிற்கு பத்தரமுல்ல கொஸ்வத்தை
இல. 264/ 2 உள்ள கண்டி கன்ஸ்ரக்ஷன் நிறுவனத்திடம்
வழங்குவதற்காக பதில் நகர திட்டமிடல் நீர்விநியோகம்
மற்றும் உயர்கல்வி
அமைச்சர் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. இலங்கை பௌத்த பாலி மற்றும்
இலங்கை ரஜரட்ட
ஆகிய பல்கலைக்கழகங்களில்
நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடங்களுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில்
58 ஆவது விடயம்)
அமைச்சரவையினால்
நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின்
சிபாரிசுக்கமைய இலங்கை பௌத்த மற்றும் பாலி
பல்கலைக்கழகத்தின் கொழும்பு அலுவலகத்திற்காக
5 மாடி கட்டிடத்
தொகுதி ஒன்றை
நிர்மாணிப்பதற்காக 252 மில்லியன் ரூபா
நிதியில் கலகெடினே
கண்டி வீதி
இல 32 இல்
கே.எஸ.ஜே கன்ஸ்ரக்ஷன்
தனியார் நிறுவனத்திடம்
வழங்குவதற்காக இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வைத்திய மற்றும் சமமான பீடத்திற்காக
உத்தேச பழமை
பாரா மருத்துவ
கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை
767மில்லியன் ரூபாவிற்கு கொழும்பு 14 மாதம்பிட்டிய வீதி
இல 295 இல்
உள்ள சன்கென்
கன்ஸ்ரக்ஷன் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக பதில்
நகர திட்டமிடல்
நீர்வழங்கல் உயர்கல்வி அமைச்சர் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி
வழங்கப்படும் தெற்கு வீதி தொடர்பான திட்டம்
கடன் இலக்கம்
3027 எஸ்.ஆர்.ஐ கடன் நிதி செலுத்தப்படாத
பிரிவு மற்றும்
நிர்மாண பயன்பாட்டை
மேற்கொண்டு மேலதிக வீதி பகுதியை புனரமைத்தல்
மற்றும் மேம்படுத்தல்
(நிகழ்ச்சி நிரலில் 64 ஆவது விடயம்)
தெற்கு
அதிவேக வீதியில்
3 இடம்மாறும் இடங்கள் மற்றும் இணையும் தேசிய
5 பெருந்தெருக்களை மேம்படுத்துவதற்கான தெற்கு வீதி அபிவிருத்தி திட்ட
செலவுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 75 மில்லியன்
அமெரிக்க டொலர்
கடனாக வழங்கியுள்ளது.
இந்த நிதியின்
கீழ் சிந்திக்கப்பட்டுள்ள
பணிகளை பூர்த்தி
செய்த பின்னர்
நிறுவன ரீதியில்
4,300 மில்லியன் ரூபா மிஞ்சுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக முறையான செயற்பாடுகளை மேற்கொண்டு
இந்த எஞ்சிய
கடன் தொகையை
பயன்படுத்தி மேலதிக வீதி பகுதியை புனரமைப்பதற்கும்
மேம்படுத்துவதற்குமாக பெருந்தெருக்கள் மற்றும்
வீதி அபிவிருத்தி
மற்றும் கனிய
வள அபிவிருத்தி
அமைச்சர் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18.கட்டான
தேசிய பொலிஸ்
பயிற்சி நிறுவனத்திற்காக
புதிய விடுதிக்காக
கட்டிடமொன்றை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 66 ஆவது
விடயம்)
கட்டான
தேசிய பொலிஸ்
பயிற்சி நிறுவனத்தில்
புதிய இருப்பிட
கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் திட்டத்திற்கான
ஒப்பந்தத்தை பெறுகை மேன்முறையீட்டு சபையின் சிபாரிசுக்கமைய
வரையறுக்கப்பட்ட வீரசூரிய பில்டர்ஸ் (தனியார்) நிறுவனத்திடம்
310 மில்லியன் ரூபாவிற்கு வழங்குவதற்காக வீடமைப்பு நிர்மாணத்துறை
மற்றும் கலாச்சார
அலுவல்கள் அமைச்சர்
சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. இலங்கை பரீட்சை திணைக்களத்தின் மொத்த
கட்டிடத் தொகுதியை
நவீனமயப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில்
69ஆவது விடயம்)
இலங்கை
பரீட்சை திணைக்களத்தின்
மொத்த கட்டிடத்
தொகுதியையும் பரிசோதனை செய்து நிலைமை தொடர்பான
அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ளல் அடையாளங் காணப்படும் முன்னுரிமை
அடிப்படையில் நவீனமயப்படுத்தலுக்கமைவாக நிர்மாணித்தல்
தொடர்பிலான ஒப்பந்தத்தை தேசிய போட்டி கேள்வி
மனு கோரும்
நடைமுறையைப் பயன்படுத்தி வழங்குதல் மற்றும் சம்பந்தப்பட்ட
ஆலோசனை சேவை
பொறியியல் பணிகள்
தொடர்பான மத்திய
ஆலோசனை அலுவலகத்திடம்
வழங்குவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
20. தேதுவ பிரதேசத்தில் ஒன்றிணைந்த சுற்றுலா
அபிவிருத்தி திட்டமொன்றை மேம்படுத்துதல்
(நிகழ்ச்சி நிரலில் 70 ஆவது விடயம்)
அரச
மற்றும் தனியார்
பங்குடைமை தொடர்பாக
சுற்றுலா பயணிகள்
செல்லும் இடங்களாக
தேதுவ பிரதேசத்தை
அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக உத்தேச அபிவிருத்தி திட்டத்தின் பாரிய
அளவில் கவனத்தில்
கொண்டு பாரிய
திட்டத்திற்காக ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கான
ஆவணத்தை வகுப்பது
தொடர்பில் மேற்கொள்ளப்படும்
ஆலோசனை சேவை
அனுபவத்துடனான தேசிய அல்லது சர்வதேச ஆலோசனை
நிறுவன சேவையை
பெற்றுக் கொள்ளுதல்
மற்றும் இந்த
திட்டம் தொடர்பில்
ஆர்வத்தை வெளிப்படுத்தும்
தரப்பினரின் விருப்பத்தை தெரிவிப்பதற்கும்;
திட்ட யோசனையை
கோருவதற்காக சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும்
கிறிஸ்தவ மத
அலுவல்கள் அமைச்சர்
காணி மற்றும்
பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் துறைமுகம் மற்றும்
கப்பல் நடவடிக்கைகள்
மற்றும் தெற்கு
அபிவிருத்தி அமைச்சர் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்திற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
21. இலங்கை துறைமுக அதிகார சபையின்
ஜய கொள்கலன்
பிரிவிற்கு 30 டெக்டர்களை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி
நிரலில் 71 ஆவது விடயம்)
சர்வதேச
போட்டி மிகு
கேள்வி நடைமுறையை
கடைப்பிடித்து இலங்கை துறைமுக அதிகார சபையின்
ஜய கொள்கலன்
பிரிவிற்கான 30 டெக்டர்களை கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவையினால்
நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் கீழ் பெறுகை பணிகளை
ஆரம்பிப்பிப்பதற்காக துறைமுகம் மற்றும்
கப்பல் நடவடிக்கைகள்
மற்றும் தெற்கு
அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார
சபை மற்றும்
பால்மாவை இறக்குமதி
செய்வோருக்கு இடையில் உடன்படிக்கை ஆவணம் (நிகழ்ச்சி
நிரலில் 22 ஆவது விடயம்)
பால்மா
இறக்குமதியாளர்கள் மற்றும் நுகர்வோர்
அலுவல்கள் தொடர்பான
அதிகார சபைக்கு
இடையில் நடைபெற்ற
பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து எட்டப்பட்ட
உடன்பாட்டுக்கு அமைவாக நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான
அதிகார சபையினால்
சமர்ப்பிக்கப்பட்ட நடைமுறைக்கு அமைவாக
இதன் பின்னர்
இறக்குமதி பால்மாக்களின்
ஆகக் கூடிய
சில்லறை விலை
நிர்ணயிக்கும் பொறிமுறையை நடைமுறைப்படுத்தப்படும்
என்று வாழ்க்கை
செலவு தொடர்பான
அமைச்சரவையின் துணைக்குழுவின் தலைவர் என்ற ரீதியில்
விவசாயம் கால்நடை
அபிவிருத்தி நீர்ப்பாசனம'; மற்றும் கடற்றொழில் மற்றும்
நீரியல் வள
அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திறந்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. பெருந்தோட்ட பிரிவை அபிவிருத்தி செய்தல்
(நிகழ்ச்சி நிரலில் 75 ஆவது விடயம்)
பெருந்தோட்டத்துறையின்
எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு பெருந்தோட்ட பிரிவின்
அபிவிருத்திக்காக அடையாளங் காணப்பட்டுள்ள அபிவிருத்தி மூலோபாயங்களை
நடைமுறைப்படுத்துவதற்காக 600 மில்லியன் ரூபா
மானியத்தை பெருந்தோட்டத்துறை
அமைச்சுக்கு வழங்குவதற்காக கௌரவ பிரதமர் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. இலங்கை சுற்றுலா தொழிற்துறையில் வர்த்தக
சின்னத்தை மீண்டும்
வலுவூட்டி கட்டியெழுப்பவதற்காக
குறுகிய கால
பொதுமக்கள் இணைப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 76 ஆவது விடயம்)
உயிர்த்தி
ஞாயிறு தாக்குதலுக்குப்
பின்னர் நாட்டின்
பொருளாதாரத்தின் முக்கிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இலங்கை சுற்றுலா தொழிற்துறை வர்த்தக
நாமத்தை மீண்டும்
வலுவூட்டி கட்டியெழுப்புதல்
மற்றும் நெருக்கடி
நிலையை முகாமைத்துவம்
செய்வதற்காக குறுகிய கால பொதுமக்கள் தொடர்பு
வேலைத்திட்டமொன்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்காக
பெறுகை வழிமுறைகளுக்கு
அப்பால் M/s J.Walter Thompson (pvt) Ltd தெரிவு செய்வதற்காக
உள்ளடக்கிய அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக சுற்றுலா
அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத
அலுவல்கள் அமைச்சர்
சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment