கூட்டணி அமைப்பது குறித்து
மஹிந்தவை தனியாக சந்திக்கிறார் மைத்திரி
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணியை அமைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துப் பேசவுள்ளார்.
அடுத்த சில நாட்களுக்குள் தனியாக இருவரும் சந்தித்து பிரச்சினைகளைத் தீ்ர்த்துக் கொள்வது குறித்து கலந்துரையாடவுள்ளனர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், மஹிந்த அமரவீர,
‘சில சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அடுத்த சில நாட்களுக்குள் இரு தலைவர்களும் சந்திக்கவுள்ளனர்.
புதிய கூட்டணியை அமைப்பதற்காக பொதுஜன பெரமுனவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு திட்டத்தை ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த இறுதி அறிக்கையின் அடிப்படையில், இரு கட்சிகளின் தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment