கல்முனையில் சீ.வி.விக்னேஸ்வரன்
ரன்முத்துகல சங்கரத்ன தேரரை சந்தித்தார்
கல்முனை
சுபத்திரா ராமய
விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரருக்கும் வடக்கு
மாகாண முன்னாள்
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கல்முனை
சுபத்திரா ராமய
விகாரஸ்தானத்தில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதேவேளை,
கல்முனை வடக்கு
பிரதேச செயலகம்
தரமுயர்த்துதல் தொடர்பாகவும் அம்பாறை வாழ் தமிழ்
முஸ்லிம் மக்களுக்கிடையிலான
கருத்து முரண்பாடுகள்
போன்ற விடயங்கள்
தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள்
வடமாகாண முதலமைச்சர்
சீ.வி.விக்னேஸ்வரன் கல்முனை
விஜயத்தின் போது சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க
பேரவையின் தலைவர்,
அரசியல் விமர்சகர்
எம்.எச்.எம்.இப்ராஹிம்
மற்றும் அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸ் கட்சியின்
கல்முனை மாநகர
சபை உறுப்பினர்
MIM.அப்துல் மனாப் மற்றும் ஊடகவியலாளர்களையும் சந்திந்தார்.
இந்
நிகழ்வு அரசியல்
விமர்சகர் எம்.எச்.எம்.
இப்ராஹிமின் இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது சமகால
அரசியல் விடயங்கள்
தொடர்பாகவும் முக்கியமாக கல்முனை வடக்கு உபபிரதேச
செயலக தரமுயர்த்தல்
தொடர்பாகவும் அண்மைக்காலமாக எமது நாட்டில் சிறுபாண்மை
சமூகங்கள் எதிர்நோக்குகின்ற
பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன்
கல்முனை வடக்கு
உப பிரதேச
செயலக விடயம்
தொடர்பாக சமூக
சேவையாளர் புர்கான்
சீ.வி.விக்னேஸ்வரனுக்கு
விளக்கம் வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.