தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்
வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை
2019.08.21 திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
பாடசாலை கட்டமைப்பை கிரமமாக முன்னெடுப்பதற்கும் நாட்டின் கல்வி துறையின் தரத்தை மேம்படுத்துவதற்கும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இதற்காக கொள்கை அடிப்படையிலான திட்டங்களை முன்னெடுப்பதற்காக சமீப காலப்பகுதியில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிபர் வெற்றிடங்கள் கொண்ட தேசிய பாடசாலைகளில் தகுதியை கொண்ட அதிபர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் அமைச்சர் முக்கிய கவனம் செலுத்தியுள்ளார்.
இதற்கு அமைவாக அரச சேவை ஆணைக்குழு, கல்வி சேவை ஆணைக்குழு ஆகியவற்றின் விதி முறைகளுக்கு அமைவாக நாடு முழவதிலும் உள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்கள் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக தகுதியைப் பெற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் இலங்கை அதிபர்கள் சேவை அதிகாரிகளின் விண்ணப்பங்களை கோருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிபர்கள் வெற்றிடங்களை கொண்ட தேசிய பாடசாலை பட்டியல் விண்ணப்பங்கள் கோரப்பட்ட தேசிய பாடசாலைகளுக்கு தகுதிகளை கொண்ட அதிகாரிகளை நியமிப்பதற்கான சேவை, தரம், விண்ணப்பித்தலுக்கான தகுதி, நடைமுறை ஆகியவற்றுடன் ஏனைய அனைத்து தகவல் மற்றும் மாதிரி படிவங்கள் 2019.07.31 அன்று www.moe.gov.lk என்ற அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படவிருப்பதாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களினால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட மாதிரி படிவத்திற்கு அமைவாக விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பபடிவத்தை அனுப்பும் கடித உறையில் வலது பக்க மேல் மூலையில் தேசிய பாடசாலை அதிபர் பதவி என்று குறிப்பிட்டு 2019.08.21 என்ற திகதிக்கு முன்னர் உதவிச் செயலாளர், கல்வி சேவை உதவிக் கிளை, கல்வி அமைச்சு, இசுறுபாய, பத்தரமுல்லை என்ற முகவரிக்கு பதிவு தபாலில் மாத்திரம் விண்ணப்பிக்க வேண்டும்.
இதே வேளை கல்வி அமைச்சரின் தலைமையில் 2016 ஆம் ஆண்டில் கல்வி கட்டமைப்பிற்கு 4000 அதிபர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இலங்கை அதிபர் சேவையில் தரம் 3 ற்கு 1918 பேர் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்பொழுது நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சின் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment