17 இலட்சம் மாணவர்களுக்கு
பசும்பால் வழங்க திட்டம்
முதல் கட்டமாக 1500 மாணவர்களுக்கு
கலவானையில் இன்று ஆரம்பம்
கிராம சக்தி வேலைத்திட்டத்தின்
கீழ் மாணவர்களின் போஷாக்கு நிலையை மேம்படுத்துவதுடன் பாலுற்பத்தியை அதிகரிப்பதற்கான
திட்டத்தின் கீழான நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்
எண்ணக்கருவிற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ்
பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கப் பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் இன்று கலவானையில்
ஆரம்பிக்கப்பட்டது.
நாட்டில் மூன்றில் ஒரு பங்கு
மாணவர்கள் போஷாக்கு குறைபாட்டுடன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தரம் ஒன்று தொடக்கம்
தரம் ஐந்து வரையிலான மாணவர்களுக்கு முதல் கட்டமாக ஒரு மாணவருக்கு 150 மில்லி லீற்றர்
பால் பக்கெட் வழங்கப்படவுள்ளது.
17 இலட்சம் மாணவர்களுக்கு
படிப்படியாக இந்த வேலைத்திட்டம் விரிவுப்படுத்தப்பட இருக்கின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment