ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு 15, 16 ஆம் திகதி
வியாழன், வெள்ளி இருநாட்களும்
முஸ்லிம் பாடசாலைகளுக்கு
விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை
ஹஜ்ஜுப்
பெருநாள் விசேட
தினத்தை முன்னிட்டு
அரசாங்கத்தினால் வழங்கப்படும் விடுமுறையைத் தொடர்ந்து மேலும்
அவ்வாரத்தில் காணப்படும் வியாழன் மற்றும் வெள்ளி
15, 16 ஆம்
திகதி ஆகிய
இருநாட்களிலும் முஸ்லிம் பாடசலைக்கு விடுமுறை வழங்க
நடவடிக்கை எடுக்குமாறு
கோரி கல்வி
அமைச்சர் அகிலவிராஜ்
காரியவசத்திற்கு முஸ்லிம்
சமய கலாசார
மற்றும் தபால்துறை
அமைச்சர் எம்.
எச். ஏ.
ஹலீம் கடிதம்
ஒன்றை அனுப்பி
வைத்துள்ளார்.
அமைச்சர்
எம். எச்.
ஏ. ஹலீம்
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில்
ஆகஸ்ட்
12 ஆம் திகதி
முஸ்லிம் மக்களின் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை
முன்னிட்டு அரசாங்கப் பாடசாலை 13 ஆம் திகதி
வரையிலும் விடுமுறை
வழங்கப்பட்டுள்ளது. மறு நாள்
14 திகதி போயா
விடுமுறை தினத்தை தொடர்ந்து
மீண்டும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில்
வியாழன் , வெள்ளிக்கிழமை
ஆகிய இரு
நாட்களிலும் பாடசாலை நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
பெருநாள்
விடுமுறையுடன் குறித்த 15, 16 ஆம் திகதிகளில் தூர
இடங்களில் உள்ள
ஆசிரியர்கள் விடுமுறையைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில்
ஈடுபடுவர். மேலும் மாணவர்களின்
பாடசாலை வரவும்
மிகவும் குறைந்து
காணப்படுவததற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
இதன்
காரணமாக ஆஸ்ட்
15, 16 ஆம் ஆகிய குறித்த இரு நாட்களையும்
விடுமுறை தினமாக
ஆக்கித் தருமாறு
தூர இடங்களிலுள்ள
ஆசிரியர்களும் பெற்றோர்களும் எம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எனவே, இந்த விடயம்
தொடர்பாக கவனத்திற்
கொண்டு விசேடமாக ஒகஸ்ட்
15, 16 ஆம் திகதிகளில் வழங்கப்படும் விடுமுறை தினங்களை
எதிர் வரும்
ஆகஸ்ட், செப்டம்பர்
மாதங்களிலுள்ள சனிக்கிழமை நாளில் பாடசாலை இடம்பெறுவதற்கு
நடவடிக்கை எடுக்குமாறும்
கல்வி அமைச்சிரிடம்
அமைச்சர் ஹலீம்
கோரிக்கையினை விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.