நிந்தவூரில் தாயினால் கொல்லப்பட்ட
இரட்டைப் பெண்
குழந்தைகள்
-விசாரணைகள் முன்னெடுப்பு.
9 மாதங்கள்
நிரம்பிய இரட்டைப்
பெண் குழந்தைகள்
கழிவறையில் வெட்டிப்
படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர்
14ம் பிரிவு
153 மௌலானா வீதி பகுதியில் இன்று
திங்கட்கிழமை (29) காலை
வீடு ஒன்றின் குளியலறையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு
படுகொலை செய்யப்பட்ட
இரட்டைப் பெண்
குழந்தைகள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள
போதிலும்
இப்படுகொலையை புரிந்ததாக சந்தேகிக்கப்படும்
குழந்தைகளின் தாயாரான 26 வயதுடைய சந்தேக
நபர் நிஹாமுதீன்
அஹமட் அமீஸா
என்பவர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளள்ளார்.
சம்பவம்
தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மற்றும் அம்பாறை தடபவியல் பொலிஸார் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகிக்கப்படும்
குழந்தைகளின் தாயார் மனநோயாளியாக காணப்படுவதாகவும் நிந்தவூர்
ஆதார வைத்தியாசலைக்கு
அனுமதிக்கப்பட்டு பின்னர் கல்முனை அஸ்ரப்
ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்படுகிறது.
அத்துடன் வீட்டில்
இருந்த
குழந்தைகளின் தந்தையான
அலியார் சியாதுல்
ஹக்கிடம்
(வயது-36) விசாரணை முன்னெடுக்கப்படுகிறதுடன் சம்பவம்
இடம்பெற்ற வேளை குறித்த
இரட்டைப் பெண்
குழந்தைகளை தானே கழுத்து
அறுக்கப்பட்டு கொலை செய்ததாகவும் அறுத்த கத்தியை
அவ்விடத்தில் வைத்துவிட்டு பின்னர் தனது கணவரிடம் பிள்ளைகளின்
கழுத்தை அறுத்து
விட்டேன் என
கூறியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில்
இருந்து தெரிய
வந்துள்ளது.
இதேவேளை குறித்த பெற்றோர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஆண் குழந்தையொன்று கிடைக்கப்பெற்று அந்த குழந்தை கடந்த வருடம் சலவை இயந்திரத்திற்குள் சிக்குண்டு உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு அந்தக் குழந்தையின் தாய் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்தும் அவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதும், முறையான சிகிச்சைகள் இன்மையால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்க கூடும் என பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.