கிண்ணியா பிரதேசத்தில்
மரத்தளபாடக் கடையொன்றில் தீ !
கிண்ணியா
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
கச்சக்கொடுத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள மரத்தளபாடக்
கடையொன்று இன்று
(25) அதிகாலை 1.00 மணியளவில் தீப்பிடிந்து
எரிந்துள்ளது.
வீட்டுக்கு
தேவையான
மரங்கள், கதவு, ஜன்னல், தளபாடங்களை கொண்ட
றோயல் மரத்தளபாடக்கடை
தீப்பற்றி எரிந்ததில்
சுமார் 50 இலட்சம்
பெருமதியான பொருட்கள் முற்றாக எறிந்து சேதமாகியுள்ளது.
செய்லாப்தீன்
முஹம்மது நஜீது என்பவருக்கு
சொந்தமான மரக்கடையே
இவ்வாறு தீப்பற்றி
எரிந்துள்ளது.
திருகோணமலை
தீயணைப்புப் படையினரினதும், கிண்ணியா பிரதேச செயலகம்,
கிண்ணியா நகர
சபை, பிரதேச
சபை மற்றும்
கடற்படையினரின் உதவியை கொண்டு தீ கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வரப்பட்டது.
அதிகாலை
1.00 மணியிலிருந்து தீயணைப்பதற்கான முயற்சில்
ஈடுபட்ட போதும்
காலை 9.00 மணியளவிலே
தீ முற்றாக
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீப்பற்றியதற்கான
காரணங்கள் இதுவரை
அறியப்படவில்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி
வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.