அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள்
பிரதமர் தலைமையில்
இம்மாதம் ஜுலை 30ஆம் திகதி வழங்கப்படும்
பட்டதாரிகளுக்கான
அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் பிரதமர் ரணில்
விக்ரமசிங்க தலைமையில் இம்மாதம் ஜுலை 30ஆம்
திகதி வழங்கப்படவுள்ளது.
இது
தொடர்பான நிகழ்வு
கொழும்பு அலரி
மாளிகையில் 12 மணிக்கு நடைபெறவிருப்பதாக தேசிய கொள்கைகள்
பொருளாதார அலுவல்கள்
மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடக்கு மாகாண
அபிவிருத்தி மற்றும் இளைஞர் அமைச்சின் அதிகாரி
ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு
மாவட்டங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 40 பட்டதாரிகளுக்கு சம்பிரதாய பூர்வமாக இதன்போது
நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. ஏனைய பட்டதாரிகளுக்கான நியமனங்கள் அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்படுவதற்கான
ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இவர்
தெரிவித்துள்ளார்.
இந்த
பட்டதாரி நியமனங்கள்
2018ஆம் ஆண்டு
அந்தந்த மாவட்டங்களில்
நடத்தப்பட்ட நேர்முக தேர்வு முடிவுகளின் அடிப்படையில்
அனுப்பப்பட்ட பெயர் பட்டியலுக்கேற்ப தேசிய கொள்கைகள்
பொருளாதார அலுவல்கள்
மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடக்கு மாகாண
அபிவிருத்தி மற்றும் இளைஞர் அமைச்சினால் 2016 பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பட்டதாரிகள்
இந்த நியமனத்துக்கு
தெரிவாகியுள்ளனர்.
மாவட்ட
அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில்
141 பட்டதாரிகள் இந்த நியமனத்துக்கு தகுதி பெற்றுள்ளதுடன்
இவர்களுள் 10 பட்டதாரிகள் ஏற்கெனவே சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 126 பட்டதாரிகள்
இந்த நியமனத்துக்கு
தெரிவாகியுள்ளதுடன் இவர்களில் 14 பட்டதாரிகள்
ஏற்கெனவே சேவையில்
உள்ளனர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
பட்டதாரி
நியமன பெயர்
பட்டியலில் இடம்பெற்ற ஏற்கெனவே சேவையில் ஈடுப்பட்டுள்ளவர்கள்
தொடர்பான விபரம்
அந்தந்த மாவட்ட
செயலகங்களால் தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள்
மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடக்கு மாகாண
அபிவிருத்தி மற்றும் இளைஞர் அமைச்சுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தின்
அதிகாரி ஒருவர்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment