வெடிபொருட்கள் தொடர்பில்
தகவல் வழங்கிய நபருக்கு
50 லட்சம் ரூபாய் சன்மானம்
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் சம்பந்தமாக முக்கியமான
தகவல்களை வழங்கிய, நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த லொறி சாரதிக்கும் 50 லட்சம் ரூபாய்
சன்மானம் வழங்க பதில் பொலிஸ் மா அதிபர் இன்று தனது அனுமதியை வழங்கியுள்ளார்.
இவர் வழங்கிய தகவல் காரணமாகவே
கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி சம்மாந்துறை செனகல் கிராமத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த
வெடிப் பொருட்கள் மற்றும் சம்மாந்துறை நிந்தவூர் பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த
வெடிப் பொருட்களை கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
தான் செய்த சேவைக்கு தனக்கு
எந்த மதிப்பு வழங்கப்படவில்லை என குறித்த சாரதி அண்மையில் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
இது சம்பந்தமாக பொலிஸ் தலைமையகத்திற்கு தெரியவந்ததை அடுத்து, இந்த நபர் வழங்கிய ஒரு
தகவலுக்கு தலா 25 லட்சம் ரூபாய் என இரண்டு தகவல்களுக்கு 50 லட்சம் ரூபாயை வழங்க பதில்
பொலிஸ் மா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.
0 comments:
Post a Comment