23.07.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவையில்
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
01. பயங்கரவாதத்தை தடுப்பதற்காக
காத்திரமான உடனடி கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 7ஆவது விடயம்)
மனிதர்கள்
பயங்கரவாதிகளாவதை தடுக்கும் நோக்காகக் கொண்டு எதிர்காலத்தில்
பயங்கரவாத குழுக்கள்
உருவாகுவதை தடுப்பதற்காக புதிய உடனடி நடவடிக்கையை
அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவையாகும்
என்பதினால் தற்காலிகமாக வரையறை உத்தரவு பயங்கரவாதம்
ஊக்குவிக்கப்படுவதை தடுத்தல் மற்றும்
பெயரிடப்படும் வெளிநாட்டில் இருத்தல் மற்றும் உயிரியற்
செய்திகளின் ஆயளவை (Biometry) தரவுகளை கட்டுப்படுத்தல் போன்ற
துறை தொடர்பில்
கவனம் செலுத்தி
கௌரவ பிரதமரினால்
அமைச்சரவைக்கு பரிந்துரை சமர்பிக்கப்பட்டது.
அது தொடர்பில்
பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அமெரிக்க உள்ளிட்ட
ஏனைய நாடுகளில்
இது தொடர்பாக
உள்ள சட்டங்கள்
குறித்து மதிப்பீடு
செய்து அமைச்சரவைக்கு
விடயங்களை சமர்ப்பிப்பதற்காக
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தலைமையிலான
அமைச்சரவை துணைக்குழுவொன்றை
நியமிப்பதற்காக அமைச்சரவையினால் அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ளது.
02. தொழில் அற்ற பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக
இணைத்துக்கொள்ளுதல் மற்றும் பயிற்றுவித்தல்
(நிகழ்ச்சி நிரலில் 13ஆவது விடயம்)
தொழில்
வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக இணைத்து கொள்ளல் மற்றும் பயிற்சி
வழங்கும் வேலைத்திட்டத்திற்கு
அமைவாக அதன்
முதல் கட்டத்தின்
கீழ் அரச
பல்கலைக்கழகங்களில் உள்ளக மாணவர்கள்
என்ற ரீதியில்
பட்டங்களைப் பெற்றுள்ள தொழிலின்றி இருக்கும் 5000 பட்டதாரிகளையும்
இதன் இரண்டாம்
கட்டத்தின் கீழ் 15,000 பட்டதாரிகளை இணைத்துக் கொண்டு
பயிற்சி அளிப்பதற்கு
அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் பெறப்பட்டடிருந்தது.
இருப்பினும் முதல் கட்டத்தின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்ட
எண்ணிக்கையில் 1800 வெற்றிடங்களுக்கும் 2ஆம் கட்டத்தின் கீழ் 15,000 பேர்
என்ற ரீதியிலும்
இன்னும் வெற்றிடங்கள்
நிலவுகின்றன. இதற்கமைவாக 16,800 வெற்றிடங்களை
முதலில் 2012 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற
பட்டதாரிகளையம் அதன் பின்னர் ஒழுங்கு விதிகளுக்கு
அமைவாக 2013 தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வருடங்களில்
பட்டம் பெற்ற
பட்டதாரிகள் என்ற ரீதியில் பயிற்சியாளர்களாக பயிற்சிக்காக துரிதமாக இணைத்துக் கொள்வதற்கு
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
என்ற விடயம்
தேசிய கொள்கை
பொருளாதார அலுவல்கள்
மீளக்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி
மற்றும் இளைஞர்
அலுவல்கள் அமைச்சர்
என்ற ரீதியில்
பிரதமரினால் அமைச்சரவை
அறிந்து கொள்வதற்காக
சமர்ப்பிக்கப்பட்டது.
03. இலங்கை தேசிய இளைஞர் தன்னார்வ
சேவை ஸ்தாபித்தல்
(நிகழ்ச்சி நிரலில் 15ஆவது விடயம்)
இளைஞர்
யுவதிகள் சமூக
சேவை அலுவல்கள்
மற்றும் சமூக
அபிவிருத்தி சேவை பணிகளுக்காக ஊக்குவித்தல் போன்று
அவர்கள் மத்தியிலான
தலைமைத்துவத்தைப் போன்றும் அபிவிருத்தியின் மூலம் குழுக்களாக
ஒன்றிணைந்து செயற்படுவது யுகத்தின் தேவையாக உள்ளது.
இதனால் ஒழுக்கத்தை
மதிக்கும் மற்றும்
ஆற்றல் மிக்க
இலங்கை இளைஞர்
சமூகத்தை கட்டியெழுப்பும்
நோக்ககாக் கொண்டு
இலங்கை தேசிய
இளைஞர் சுயேட்சை
சேவையை ஸ்தாபிப்பதற்காக
தேசிய கொள்கை
பொருளாதார அலுவல்கள்
மீளக்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி
மற்றும் இளைஞர்
அலுவல்கள் அமைச்சர்
என்ற ரீதியில்
பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
04. பனை நிதியத்தை ஸ்தாபித்தல் (நிகழ்ச்சி
நிரலில் 19ஆவது
விடயம்)
இலங்கையில்
மறுசீரமைக்கப்பட்ட ஏற்பாடுகளை வலுவூட்டுவதற்காக
2019ஆம் ஆண்டு
வரவு செலவு
திட்டத்தின் மூலம் 15.25 பில்லியன் ரூபா மானியம்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் அங்கீகரிக்கப்பட்ட
பரிந்துரைகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேண்தகு வகையில்
அபிவிருத்தி பயன்கள் கிடைப்பதை உறுதி செய்யும்
நோக்கமாகக் கொண்டு பனை நிதியம் என்ற
பெயரில் சுதந்திர
நிதியமொன்றை அமைப்;பதும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதிகமாக மதுபானத்திற்காக ஈர்க்கப்படுதல், மதுபானம்
பாவனையினால் ஏற்படக்கூடிய அழுத்தம், இளைஞர் தொழில்
வாய்ப்பின்மையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட விடயங்களுக்காக சிவில்
சமூகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ஆலோசனை மற்றும் நிவாரண
வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது
இந்த நிதியத்தின்
நோக்கமாகும். இந்த நோக்கத்திற்காக 2 வருட காலத்திற்குள்
ஒதுக்கீடு செய்வதற்காக
5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்
அபிவிருத்தி பணிகளுக்காக இந்த நிதியத்தின் மூலம்
மானியம் வழங்குவதற்கு
எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக பனை
நிதியம் என்ற
பெயரிலான சுதந்திர
நிதியமொன்றை அமைப்பதற்கு தேவையான திருத்த சட்டமூலத்தை
தயாரிக்குமாறு திருத்த சட்டமூலம் வரைவுக்கு ஆலோசனை
வழங்குவதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
05. பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (திருத்தம்)
திருத்த சட்டம்
(நிகழ்ச்சி நிரலில் 20ஆவது விடயம்)
வட்
வரிக்கமைவாக 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு
திட்ட முன்மொழிவுகளில்
குறிப்பிடப்பட்ட சில திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய நிர்மாண
தொழிற்துறையைப் போன்று தேசிய மூலப்பொருளை பயன்படுத்தும்
சில தேசிய
கைத்தொழிற்துறையை ஊக்குவிப்பதற்காக 2002 ஆம் ஆண்டு இல
14 இன் கீழான
பெறுமதி சேர்க்கப்பட்ட
வரி திருத்த
சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக
அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த அனுமதிக்கு
அமைவாக சட்ட
திருத்தத்தை தயாரிப்பு பிரிவினால் திருத்த சட்டமூலம்
மேற்கொள்ளப்பட்டுள்ள பெறுமதி சேர்க்கப்பட்ட
வரி (திருத்தம்)
திருத்த சட்டமூலத்தை
அரச வர்த்தமானியில்
வெளியிடுவதற்கும் அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு
நிதியமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது
06. தேசத்தை கட்டியெழுப்பும் வரி (திருத்தம்)
திருத்த சட்ட
மூலம் (நிகழ்ச்சி
நிரலில் 21ஆவது
விடயம்)
நிர்மாணத்துறை,
சுற்றுலா சேவை,
இரத்தினக்கல் தங்க ஆபரணம் கைத்தொழிற்துறை மற்றும்
சில செயலாக்க
கைத்தொழிற்துறைக்கு அமைவான வரி
நிவாரணம் வழங்குதல்,
சிகரட் தயாரிப்பு
தேசத்தை கட்டியெழுப்பும்
வரிக்கு உட்படுத்தல்
உட்பட தேசத்தை
கட்டியெழுப்பும் வரிக்கு அமைவாக 2019 ஆம் ஆண்டு
வரவு செலவு
திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு
தேவையான சட்ட
ஏற்பாடுகளை உள்ளடக்கி 2009 ஆம் ஆண்டு இல
9 இன் கீழான
தேசத்தை கட்டியெழுப்பும்
வரி சட்டத்தை
திருத்தம் செய்வதற்காக
சட்ட திருத்த
வரைவினால் தயாரிக்கப்பட்டுள்ள
திருத்தம் தேசிய
தேசத்தை கட்டியெழுப்பும்
வரி (திருத்தம்)
திருத்த சட்டமூலத்தை
அரசாங்கத்தின் வர்த்தமானி சட்டத்தில் வெளியிடுவதற்காகவும் அதனை தொடர்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதியமைச்சர்
சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. தபால் திணைக்களத்திற்காக புதிய சம்பள
கட்டமைப்பை பெற்றுக் கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில்
34ஆவது விடயம்)
தபால்
திணைக்களத்திற்காக புதிய சம்பள
கட்டமைப்பை தயாரித்து அமைச்சரவைக்கு இதற்கு முன்னர்
சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் அமைச்சரவையினால் அது
அதிமேதகு ஜனாதிபதி
அவர்களினால் ரயில், சுகாதாரம், கல்வி, தபால்
உள்ளிட்ட அனைத்து
அரச நிறுவனங்களிலும்
நிலவும் சம்பள
முரண்பாடுகள் தொடர்பில் சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அரசதுறை சம்பள மதிப்பீட்டு
பிரிவில் சம்பள
மதிப்புரை தொடர்பான
விசேட ஆணைக்குழுவின்
சிபாரிசை பெற்றுக்
கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த
ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்
தபால் திணைக்களத்தில்
நிலவும் சம்பள
முரண்பாட்டை நீக்குவதற்கான சிபாரிசை போன்று ஏனைய
சேவைகள் மற்றும்
அரச நிறுவனங்களுக்கான
தனது சிபாரிசுகள்
சமர்ப்பிக்கப்படும்.
அமைச்சரவையினால்
2019ஆம் ஆண்டு
பெப்ரவரி மாதம்
12ஆம் திகதி
நடைபெற்ற தனது
கூட்டத்தின் போது அதன் ஆணைக்குழுவின் அறிக்கையின்
சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதை தொழில்நுட்பம்
மற்றும் நிதி
மதிப்பீட்டை மேற்கொண்டு சிபாரிசை சமர்ப்பிப்பதற்காக நிதியமைச்சரின் தலைமையிலான அமைச்சரவை துணைக்குழுவொன்றும்
அதற்கு ஒத்துழைப்பு
வழங்குவதற்காக அதிகாரிகள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அதில் குழுவின் அறிக்கை விரைவான
தினத்தில் அமைச்சரவைக்கு
சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக தபால்
திணைக்களத்திற்கான புதிய சம்பள
கட்டமைப்பை விரைவாக வகுக்கப்படும் தேவை தொடர்பில்
தபால் சேவை
மற்றும் முஸ்லிம்
மத அலுவல்கள்
அமைச்சர் என்ற
ரீதியில் சமர்ப்பிக்கப்பட்ட
விடயங்களை அமைச்சரவையினால்
கவனத்தில் கொள்ளப்பட்டதுடன்
ஏனைய சேவை
மற்றும் அரச
நிறுவனங்கள் பலவற்றுக்கு அமைவாக அரச துறையில்
சம்பள மதிப்பீடு
தொடர்பிலான விசேட ஆணைக்குழுவின் சிபாரிசு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில்
தபால் திணைக்களத்திற்குமான
வகையில் அதன்
சிபாரிசை நடைமுறைப்படுத்தல்
பொருத்தமானதல்ல என்பதினாலும் மேலே குறிப்பிட்ட வகையில்
விசேட சம்பள
குழு சபையினால்
சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து சிபாரிசுகள்
தொடர்பிலும் நிதியமைச்சரின் தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை
துணைக்குழுவிற்கு அமைவாக தெரிவுக்குழுவின் சிபாரிசுக்கமைய உடனடியாக
தபால் திணைக்களத்திற்கு
அமைவாக அதன்
ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசு
முதன்மை அடிப்படையில்
நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவையினால்
தீர் மானிக்கப்பட்டுள்ளது.
08. ITMIS கட்டமைப்பு அரசின் அமைச்சு மற்றும்
திணைக்களத்துக்குள் ஸ்தாபித்தல் (நிகழ்ச்சி
நிரலில் 38ஆவது
விடயம்)
நடைமுறைப்படுத்தப்பட்ட
2 முன்னோடி திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில் அனைத்து
அமைச்சு திணைக்களம்,
மாவட்ட செயலகம்
மற்றும் விசேட
செலவு நிறுவனங்களுக்குள்
தற்பொழுது பயன்படுத்தப்படும்
CIGAS கட்டமைப்புக்காக ஒன்றிணைக்கப்பட்ட திரைசேரி முன்னெடுப்பு தகவல் கட்டமைப்பொன்று
ITMIS நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த
கட்டமைப்புக்காக Free Balance Inc நிறுவனத்தினால்
தயாரிக்கப்பட்டுள்ள மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன்
மென்பொருளை பயன்படுத்தும் பொழுது மேலும் மேற்கொள்ளப்பட
வேண்டிய மேம்படுத்தல்
மற்றும் கட்டமைப்பில்
மாற்றத்தை மேற்கொள்வது
இந்த நிறுவனத்தினூடாக
மாத்திரமே ஆகும்.
இதற்கமைவாக ITMIS கட்டமைப்பு அனைத்து அரச நிறுவனங்களிலும்
ஸ்தாபிப்பதற்காக அமைச்சரவை நியமித்த பெறுகைக்குழு மற்றும்
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப
மதிப்பீட்டு குழுவொன்றை நியமித்தல் இந்த குழு
சிபாரிசுக்கமையFree Balance Inc நிறுவனத்திடமிருந்து
இந்த சேவையைப்
பெற்றுக் கொள்வதற்காக
நிதி அமைச்சர்
சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. உர பெறுகையை மேற்கொள்ளுதல் - 2019 (மதிப்பீடு) (நிகழ்ச்சி நிரலில் 44ஆவது
விடயம்)
வரையறுக்கப்பட்ட
இலங்கை உர
நிறுவனம் மற்றும்
வரையறுக்கப்பட்;ட கொழும்பு கொமர்ஷல் உர
நிறுவனம் ஆகஸ்ட்
மாதத்திற்கான உர தேவையை பூர்த்தி செய்வதற்காக
யூரியா (பிரில்ட்)
5500 மெற்றிக் தொன்னை ஒரு மெற்றிக் தொன்
322.74 அமெரிக்க டொலர் வீதமும் யூரியா (கிரனியூலா)
60,000 மெற்றிக் தொன்னை 1 மெற்றிக் தொன் 312.99 அமெரிக்க
டொலர் வீதமும்
மியுரெட் ஒப்
பொடேஸ் உரம்
(சிவப்பு – ரோஸ்) 5900 மெற்றிக் தொன்னை 1 மெற்றிக்
தொன் 355.49 அமெரிக்க டொலர் வீதமும் வெல்லன்சி
இன்டர்நெஷனல் டிரேடிங் பிரைவட் லிமிட்டட்டிடமும் ட்ரிபல் சுபர் பொஸ்பேட் 15,800 மெற்றிக்
தொன்னும் 1 மெற்றிக் தொன்னை 302.50 அமெரிக்க டொலர்
வீதம் வரையறுக்கப்பட்ட
கோல்டன் பாலி
இன்டர்நெஷனல் தனியார் நிறுவனத்திடம் பெறுகை செய்வதற்கான
அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கென விவசாய கிராமிய
பொருளாதார அலுவல்கள்
கால்நடை அபிவிருத்தி
நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல்
வள அபிவிருத்தி
அமைச்சர் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி
வழங்கப்படும் 2 ஆவது ஒன்றிணைக்கப்பட்ட வீதி முதலீட்டு
வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில்
(பிஐசி 04 ) திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக
ஆலோசனை சேவைக்கான
ஒப்பந்தத்தை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 42ஆவது
விடயம்)
ஆசிய
அபிவிருத்தி வங்கியினால் நிதி வழங்கப்படும் 2ஆவது
கூட்ட வீதி
முதலீட்டு வேலைத்திட்டத்தின்
கீழ் நிர்மாண
கண்காணிப்பு ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும் ஏனைய
நடவடிக்கைகளை மேற்கொள்ளும் செயற்பாடு உள்ளிட்டவை அடங்கலாக
வடமாகாண திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனை சேவை
ஒப்பந்தத்தை M/s MG Consultants (Pvt.)
Ltd (Sri Lanka) in joint venture with Engineering consultants (Pvt.) Ltd (Sri
Lanka) என்ற நிறுவனத்திடம் 2.37 மில்லியன்
அமெரிக்க டொலர்கள்
மற்றும் 791.5 மில்லியன் ரூபா வழங்குவதற்காக பெருந்தெருக்கள்
வீதி அபிவிருத்தி
மற்றும் கனிய
வளங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவையினால்
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
11. தெற்கு கொழும்பு துறைமுக அபிவிருத்திக்காக
கிழக்கு கடல்
தடை கப்பலில்
இருந்து கரையோரம்
வரையிலான நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் கிரேன்கள் மற்றும் கிரண்டி கிரேன்களை
கொள்வனவு செய்தல்
(நிகழ்ச்சி நிரலில் 53ஆவது விடயம்)
தெற்கு
கொழும்பு துறைமுகத்தின்
கிழக்கு கொள்கலன்
பிரிவு அபிவிருத்திக்காக
ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு இலங்கை இந்தியா
மற்றும் ஜப்பானுக்கிடையிலான
புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரத்தின் அடிப்படையில்
எட்டப்பட்டுள்ள கொழும்பு தெற்கு துறைமுக கிழக்கு
கொள்கலன் செயற்பாட்டு
முன்னெடுப்பு நிலைமைக்கு கொண்டு வருவதற்கு தேவையான
6 கிரேன்கள் மற்றும் மின்சாரத்தினால் செயற்படுத்தப்படும் றப்பர் டயர் பயன்படுத்தப்பட்ட 18 கிரண்டி கிரேன்களை கொள்வனவு செய்து
ஸ்தாபிக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கமைவாக புரிந்துணர்வு உடன்படிக்கையில்
பல்வேறு தன்மைகளுக்கு
அமைய இந்த
கொள்கலன் செயற்பாட்டு
உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக துறைமுகம் மற்றும்
கடல் நடவடிக்கைகள்
அமைச்சர் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா
பயணிகளுக்காக சுதந்திர விசா விநியோகித்தல் (நிகழ்ச்சி
நிரலில் 56ஆவது
விடயம்)
சுற்றுலா
பயணிகளின் பெரும்
எண்ணிக்கையிலானோர் இலங்கையை கவரும்
நோக்கத்தைக் கொண்ட அமைச்சரவையினால் தாய்லாந்து, ஐரோப்பிய
ஒன்றியம், பிரிட்டன்,
அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, தென்கொரியா, கனடா,
சிங்கப்பூர், நியூசிலாந்து, மலேசியா, சுவிற்ஸ்லாந்து, கம்போடியா
ஆகிய நாடுகளிலிருந்து
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான
சுதந்திர அடிப்படையில்
வருகையின் போது
வழங்கப்படும் சுற்றுலா விசா அனுமதிப் பத்திரம்(
On Arrival visas) வழங்கும் உத்தேச
திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் உயிர்த்த ஞாயிறு அன்று ஏற்பட்ட
பயங்கரவாத தாக்குதலினால்
ஏற்பட்ட பாதுகாப்பு
நிலைமையைக் கவனத்தில் கொண்டு சுதந்திர அடிப்படையில்
விசாவை வழங்குதல்
அமைச்சரவையினால் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது
வரையில் நாட்டின்
நிலைமை வழமை
நிலையில் இருப்பதாகவும்
சுற்றுலா பயணிகளின்
வருகை அதிகரிக்கும்
நோக்கில் மேலைத்தேய
நாடுகள் உள்ளிட்ட
டென்மார்க், சுவிற்ஸ்லாந்து, நோர்வே, பின்லாந்து ஆகிய
நாடுகளுக்கு சுதந்திர அடிப்படையில் வருகை தருவோருக்கு
வழங்கப்பட்டுள்ள சுற்றுலா விசா அனுமதி பத்திரம்;
வழங்கும் உத்தேச
திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக
சுற்றுலா அபிவிருத்தி
வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவலகள்
அமைச்சரினால்
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment