புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள
கொங்கோ நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு
சவூதி அரசு தடை

கொங்கோ நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள சவூதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது.

கொங்கோ நாட்டில் எபோலா வைரஸ் பரவியுள்ளமையே இதற்கு காரணம் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் கொங்கோவில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் கொங்கோ நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு விசா வழங்குவது நிறுத்திவைக்கப்படுவதாக சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்கம் கடுமையாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியதை காரணம் காட்டி, இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1700 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொங்கோவின் தென் கிழக்கு நகரங்களில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய எபோலா வைரஸ் உகண்டாவிற்கும் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top