பலமுறை தற்கொலைக்கு முயன்றும் சாகமுடியவில்லை
கொலை செய்தால் தூக்கு தண்டனை கிடைக்கும்!
இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய
தாய் இப்படி வாக்குமூலம்!
நிந்தவூர்
இரட்டை பெண்
குழந்தைகளின் கொலையுடன் தொடர்புடைய தாய் திடுக்கிடும்
வாக்கு மூலம்
ஒன்றை வழங்கியுள்ளார்.
பலமுறை
தற்கொலைக்கு முயன்றும் சாகமுடியவில்லை. கொலை செய்தால்
தூக்கு தண்டனை
கிடைக்கும் என்றே கொலை செய்தேன் என
இரட்டைக் கொலையுடன்
தொடர்புடைய தாய் பகீர் வாக்குமூலம் ஒன்றை
வழங்கியுள்ளார்.
இரு
கைக்குழந்தைகள் சுய நினைவற்ற தாயினால் கடந்த
திங்கட்கிழமை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிஹாமுதீன்
அஹமட் அமீஸா
என்ற குறித்த
தாய் தற்போது
கல்முனை வடக்கு
ஆதார வைத்தியசாலையின்
உளவளப்பிரிவில் கணவர் ஏ. சியாதுல் ஹக்
கண்காணிப்பில் சிகிச்சைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்
சம்மாந்துறை நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர் அங்கொடை
வைத்தியசாலையின் உளவளபிரிவில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.
குறித்த
தாய் எவ்வாறு
மனநலம் பாதிப்படைந்தார்
என்பது தொடர்பிலும்
தற்போது தகவல்
வெளியாகியுள்ளது. இவரிற்கு 2015 இல் முதல் குழந்தை
பிறந்துள்ளது. அந்தக் குழந்தையை 2017ஆம் ஆண்டு
விபத்து ஒன்றில்
பறிகொடுத்திருக்கிறார்.
அதன்
பின்னர் தற்கொலைக்கு
முயன்றிருக்கின்றார். அதன் பின்ர்
மீண்டும் கர்ப்பமடைந்து,
2018ல் இரட்டைக்
குழந்தைகளை பிரசவித்துள்ளார். இருப்பினும்
இதற்கிடையில் பலமுறை தற்கொலைக்கான முயற்சிகளை மேற்கொண்டு
தோல்வியடைந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment