சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை
சாய்ந்தமருது பிரநிதிகளுக்கும்
ஹரிஸுக்கும்  இடையில் கருத்துமோதல்களும்
வாதப்  பிரதி வாதங்களும்
இப்படியும் ஒரு தகவல்

சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை சம்பந்தமாக இன்று புதன் (24 ம் திகதி சாய்ந்தமருது பிரதிநிதிகள் கொழும்புக்கு வருகை தந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வூப் க்கீம் இல்லத்திலும் ,அமைச்சா் பௌசி இல்லத்திலும் ..சந்தித்து கலந்துரையாடினார்கள்.

இச்சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவா் றிசாத் பதியுத்தீன் முன்னாள் இராஜாங்க அமைச்சா் எச்.எம். எம்.ஹரீஸ், முன்னாள் பிரதியமைச்சா் அப்துலாஹ் மஹ்றூப் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
 இங்கு கருத்து தெரிவித்த அனைத்து தலைவா்களும் கல்முனை மக்கள் பிரதிநிதியின் முடிவிலேயே சாய்ந்தமருது பிரச்சினைக்கு தீர்வு உள்ளது.எனக் கருத்துக்களை முன்வைத்தனா்.

 சாய்ந்தமருது பிரநிதிகளுக்கும் எச்.எம்.எம். ஹரிஸுக்கும்  இடையில் சில கருத்துமோதல்களும் வாதப்  பிரதி வாதங்களும் இடம் பெற்றன. இறுதியில் எச்.எம்.எம்.ஹரிஸ் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

கல்முனை தமிழ் முஸ்லிம் பிரதேச செயலளாளா் பிரச்சினைக்கு பிரதமா் ஆகஸ்ட் 10ஆம் திகதிக்கு முன்னா் தனக்கு தீா்வு பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்துள்ளார். இவ் விடயத்தில் பல்வேறு சுற்றுப் பேச்சுக்களில் அமைச்சா் வஜிர அபேவர்த்தன ஈடுபட்டு வருகின்றார் . அது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

கல்முனையை நான்காக பிரிப்பதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பின்னர், தமிழ்த் தரப்புடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. தமிழ்த்தரப்பு அவர்களுடைய முன்மொழிவுகளை சமர்ப்பித்திருக்கிறார்கள். அதேபோன்று நாங்களும் எங்களது முன்மொழிவுகளை சமர்ப்பித்திருக்கிறோம். அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுடன் இதுதொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றோம்.

நானும், தலைவர் ரவூப் ஹக்கீமும், றிஷாத் பதியுதீனும் பிரதமரின் ஏற்பாட்டில் அமைச்சர் வஜிர அபேவர்தனவை சந்தித்து கல்முனை விவகாரம் தொடர்பில் கலந்துரையாடினோம். இந்தப் பேச்சுவார்தையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. எங்களது தீர்மானங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அறிவிப்பதற்காக அவர் கூறியுள்ளார். விரைவில் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படுவதற்கான உத்தரவாதத்தை அவர் தந்திருக்கிறார்.

சாய்ந்தமருதுக்கு நகரசபை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாராகவுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தீர்க்கப்பட்ட பின்னர், கல்முனையை நான்காக பிரித்து சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படும். இந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றும் ஒரே நேரத்தில் தீர்வுகாணப்படும்

இப் பிரச்சினை முடிவுற்றதும் ஆகஸ்ட் 13ல் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை அல்லது 3 சபைகள் பற்றி மீள கலந்துரையாடி தீா்வு பெற்றுத் தருவதாகவும்  உறுதியளித்தார். அதுவரையும் சாய்ந்தமருது மக்கள் காத்திருக்கவேண்டும். வருகை தந்திருந்த சாய்ந்தமருது பிரநிதிகளிடம் கூறினார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top