ஒக்டோபர் 15இற்கு முன்
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான அழைப்பை விடுப்பது குறித்து அரசியல் கட்சிகளால் தீர்மானிக்க முடியாது என்றும் அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவே முடிவு செய்யும் என்றும், ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
செப்டெம்பர் 15
(நாளை) ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால், தேர்தல் அறிவிப்பை முன்கூட்டியே வெளியிடுவதாயில், செப்டெம்பர் 16ஆம் திகதி வெளியிட முடியும்.
எனினும், தேர்தல் நடத்தக் கூடிய முந்திய காலத்தில் நாங்கள் தேர்தலை அறிவிக்கமாட்டோம் என்று கூறி இருந்தோம்.
தேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடி, பொருத்தமான நாளில் தேர்தல்களை அறிவிக்கும்.
அது செப்டெம்பர் 16 முதல் ஒக்டோபர் 15 வரையுள்ள எந்த நாளாகவும் இருக்கலாம். அந்த நாளை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மட்டுமே உள்ளது.
ஒக்ரோபர் 16ஆம் திகதிக்குப் பிந்திய எந்த நாளிலும் வேட்புமனுவைக் கோரலாம்.
முன்னதாக நாங்கள் முடிவு செய்யலாம் என்று நினைத்தால், இந்த மாத இறுதிக்குள் அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.
0 comments:
Post a Comment