யானைகள் எம்மைக் குறுக்கிட்டால்
(அலம்தர்ர கைப) என்ற அல்குர்ஆன்
ஆயத்தை ஒதி ஊதும்படி
எனது தந்தை ரணசிங்க பிரேமதாசா குறிப்பிட்டுள்ளார்
அமைச்சர் சஜீத் பிரேமதாச தெரிவிப்பு
இது 2013 அக்டோபர் மாதம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் எடுக்கப்பட்ட படம் |
இது 2013 அக்டோபர் மாதம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் எடுக்கப்பட்ட படம் |
நான்
உண்மையான ஒரு
பௌத்தவாதி. இனவாதமோ மதவாதமோ நாட்டில் தலைதூக்கக்கூடாது. நான் கார்ப்போட்
பௌத்தன் அல்ல
என அமைச்சர்
சஜித் பிரேமதாசா
தெரிவித்துள்ளார்.
நேற்று
வெள்ளிக்கிழமை மாலை (13) அநுராதபுரம் பெரிய பள்ளிவாசலில்
நடைபெற்ற நிகழ்வொன்றில்
உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாசா
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர்
சஜித் பிரேமதாசா தொடர்ந்து பேசுகையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
எனது
தந்தை ரணசிங்க
பிரேமதாசா நாம் யானைகளை எதிர்கொள்ளும்
போது அதிலிருந்து பாதுகாப்பாக தப்பிக்கொள்வதற்கு (அலம்தர கைப்ப)
என்ற அல்குர்ஆன்
ஆயத்தை ஒதி
ஊதும்படி குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறே
இன்னும் சில
அல்குர்ஆன் வசனங்களை கற்றுத் தந்துள்ளார். அவற்றை
நான் அறிந்து
வைத்துள்ளேன் எனது தந்தைக்கு அவரின் முஸ்லிம்
நண்பர்கள் சொல்லிக்கொடுத்திருந்தார்கள் எனவும் இதன்போது
சஜித் தெரிவித்துள்ளார்.
காட்டு யானை எம்மைக் குறுக்கிட்டால்
அமைச்சர் சஜீத் பிரேமதாசவின்
கேள்வியும்? பதிலும்!
2013 ஆம் ஆண்டு ஒரு நினைவு..
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எதிர்க்கட்சிகள் இணைந்து நடாத்திய ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் (அன்று பாராளுமன்ற உறுப்பினர் இன்று அமைச்சர்) சஜீத் பிரேமதாச அங்கு கூடியிருந்த முஸ்லிம் பெண்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போது,
அவர்களிடம் காட்டு யானை எம்மைக் குறுக்கிட்டால் குர்ஆனில் ஒரு சூரா உள்ளது. அதனை ஓதினால் யானை எம்மை ஒன்றும் செய்யாமல் விலகிச் சென்று விடும் என்று கூறுகிறார்கள் அது என்ன சூரா என்று உங்களுக்கு தெரியுமா? என்று ஒரு கேள்வியைத் தொடுத்தார்.
இவ்வாறு கேள்வி எழுப்பிய சஜீத் பிரேமதாச ஸூரத்துல் ஃபீல் எனும் அச் சூராவை அவரே அவ்விடத்தில் கூறிவிட்டு முழுமையாக ஓதியும் காட்டி ஆச்சிரியத்தை ஏற்படுத்தினார்.
'அலம்தர்ர கைப பகல ரப்புக்க பிஅஸ்ஹாபில் பீல். அலம் யஜ்ஹல்கைதஹும் பீ தழ்லீல். வஅர்ஸல அலைஹிம் தையிரன் அபாபீல். தர்மீஹிம் பிஹிஜாரத்திம் மின்ஸிஜ்ஜீல். பஜஹலஹும் கஹஸ்பின் மவ்கூல்.'
என்று சஜீத் பிரேமதாச அச் சூராவை ஓதிக்காட்டினார்.
இதனை எனக்கு எனது தந்தை (ஆர். பிரேமதாச) சொல்லித் தந்ததாகவும் தனது தந்தைக்கு அவரின் முஸ்லிம் நண்பர்கள் சொல்லிக் கொடுத்ததாகவும் அவர் அவ்விடத்தில் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment