காட்டு யானை எம்மைக் குறுக்கிட்டால்
அமைச்சர் சஜீத் பிரேமதாசவின்
கேள்வியும்?  பதிலும்!
2013 ஆம் ஆண்டு ஒரு நினைவு..

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எதிர்க்கட்சிகள் இணைந்து நடாத்திய ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் (அன்று பாராளுமன்ற உறுப்பினர் இன்று அமைச்சர்) சஜீத் பிரேமதாச அங்கு கூடியிருந்த முஸ்லிம் பெண்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போது,

அவர்களிடம் காட்டு யானை எம்மைக் குறுக்கிட்டால் குர்ஆனில் ஒரு சூரா உள்ளது. அதனை ஓதினால் யானை எம்மை ஒன்றும் செய்யாமல் விலகிச் சென்று விடும் என்று கூறுகிறார்கள் அது என்ன சூரா என்று உங்களுக்கு தெரியுமா?  என்று ஒரு கேள்வியைத் தொடுத்தார்.
இவ்வாறு கேள்வி எழுப்பிய சஜீத் பிரேமதாச ஸூரத்துல் ஃபீல் எனும் அச் சூராவை அவரே அவ்விடத்தில் கூறிவிட்டு முழுமையாக ஓதியும் காட்டி ஆச்சிரியத்தை ஏற்படுத்தினார்.
    'அலம்தர்ர கைப பகல ரப்புக்க பிஅஸ்ஹாபில் பீல். அலம் யஜ்ஹல்கைதஹும் பீ தழ்லீல். வஅர்ஸல அலைஹிம்  தையிரன் அபாபீல். தர்மீஹிம் பிஹிஜாரத்திம் மின்ஸிஜ்ஜீல். பஜஹலஹும் கஹஸ்பின் மவ்கூல்.'
  என்று சஜீத் பிரேமதாச அச் சூராவை ஓதிக்காட்டினார்.

   இதனை எனக்கு எனது தந்தை  (ஆர். பிரேமதாச) சொல்லித் தந்ததாகவும் தனது தந்தைக்கு அவரின் முஸ்லிம் நண்பர்கள் சொல்லிக் கொடுத்ததாகவும் அவர் அவ்விடத்தில் தெரிவித்தார்.

குறிப்பு: இப்படி முஸ்லிம் சமூகத்தை நன்கு அறிந்திருந்த ஆர். பிரேமதாசவின் மகனான சஜீத் பிரேமதாச குருணாகல் பிரதேசத்தில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டபோது அந்தப் பிரதேசத்திற்குச் சென்று அழிவுகளைப் பார்வையிட்டு தாக்கப்பட்ட அப்பாவியான அந்த மக்களுக்கு ஆறுதல் கூற  அவரது மனம் இடம் கொடுக்கவில்லை.

இது மாத்திரமல்லாமல் தென் கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் செய்த ஒரு தவறுக்கு  அமைச்சர் என்ற வகையில் தலையீடு செய்து மன்னிப்பை ஏற்காது நீதி அதன் கடமையைச்செய்யும் என்று கூறி விலகி நின்றதையும் முஸ்லிம் சமூகம் மறக்கமுடியாமல் உள்ளது.

இவரின் அமைச்சின் கீழுள்ள வீடமைப்பு திட்டத்தில் கூட முஸ்லிம் சமூகத்திற்கு வீடுகளோ, வீடமைப்புத் திட்டங்களோ குறிப்பிட்டுச்சொல்லக்கூடியவாறு இல்லை என்றும் முஸ்லிம் சமூகத்தால் குற்றம்சாட்டப்படுகின்றது.

ஏ.எல்.ஜுனைதீன்





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top