குண்டுவெடிப்பில் 7 பேர் பலி
10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
துருக்கியில் நிகழ்ந்த சம்பவம்
துருக்கி நாட்டில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி என்னும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.
பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான் பயங்கரவாதிகள், கான்டில் மலைப்பகுதியில் முகாமிட்டு இங்கிருந்தவாறு துருக்கி எல்லையில் தற்கொலைப்படை தாக்குதல் போன்ற பயங்கரவாத செயல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.
இவர்களை ஒடுக்கும் பணியில் துருக்கி நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டுள்ளன. இதனால் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில், துருக்கியின் தென்கிழக்கில் உள்ள டியர்பகீர் மாகாணத்துக்கு உள்பட்ட பகுதியில் சாலையின் ஒரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்தது. இதில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment