ரணிலின்
எதிர்ப்பையும் மீறி
சஜித்தின்
பின்னால்
அலையென
திரண்ட மக்கள்
அமைசச்ர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு திரட்டும் மற்றுமொரு
மாபெரும் பொதுக்கூட்டம் குருணாகலில் இடம்பெற்றது.
குருணாகல் சத்யவாதி மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் இடம்பெற்ற
நிலையில் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆதரவளார்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
இந்த கூட்டத்தில் அஜித் பி.பேரெரா, ஹரின் பெர்னாண்டோ, சுஜித சேன சிங்க
உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்
தெரிவு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இழுபறி நிலவி வரும் நிலையில், இவ்வாறான பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டாம் என ஐதேகவின்
தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில்,
பிரதமரின்
எதிர்ப்பினையும் மீறி இன்றையதினம் குறித்த பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு
நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment