நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை
ரத்து செய்ய நடவடிக்கை!
மாலைத்தீவு நாடாளுமன்றில் ரணில் தெரிவிப்பு
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாலைதீவு நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது பிரதமர் இதனைக் குறிபபிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு காணப்பட்ட எதேச்சாதிகார அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் கடுமையாக அரசியல் அமைப்பினை மீறிய காரணத்தினால் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாடாளுமன்றில் கூடுதல் ஆதரவு இருப்பவர்களே பிரதமர் பதவிக்காக நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில், மாலைதீவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் மாலைதீவு நாடாளுமன்றில் சபாநாயகருக்கு நிகரான ஆசனமொன்றை பிரதமர் ரணிலுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment