வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் :
முதலிடத்தில் வியன்னா

உலகில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியலில் வியன்னா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக மெல்பேர்ன் நகரமே முதலிடத்தில் இருந்து வந்தது.

பொருளாதார புலனாய்வு குழு, ஆண்டுதோறும் உலகில் வாழ்வதற்கு ஏற்ற 140 நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. வாழ்க்கை தரம், குற்றங்களின் எண்ணிக்கை, போக்குவரத்து உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், அரசியல், பொருளாதார நிலைத்தன்மை உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் கடந்த 7 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த மெல்பேர்னை பின்னுக்கு தள்ளி, 99.1 புள்ளிகள் பெற்று வியன்னா இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது.

2018 ம் ஆண்டிற்கான உலகில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியலில் வியன்னா, மெல்பேர்னை தொடர்ந்து சிட்னி, ஒசாகா, கல்கரி நகரங்கள் இடம்பிடித்துள்ளன. ஐரோப்பா டாப் 20 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இது தவிர ஜப்பான், ,நியூசிலாந்து, கனடா ஆகியனவும் இடம்பெற்றுள்ளன. அரசுக்கு எதிரான போராட்டம் காரணமாக பாரீஸ் 6 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு 25 வது இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நகரமாக தலைநகர் டில்லி உள்ளது. அதுவும் தரம்குறைந்த காற்று, வெப்பநிலை, குடிநீர் விநியோகம் ஆகியவற்றால் 125வது இடத்தில் உள்ளது. 118 வது இடத்தில் கெய்ரோ உள்ளது. பயங்கரவாதம் மற்றும் குற்றங்களால் அதிக பாதிக்கப்பட்டுள்ள லண்டன் 48 வது இடத்திலும், நியூயார்க் 58 வது இடத்திலும் உள்ளன.
The world's most livable cities 2019
1. Vienna, Austria
2. Melbourne, Australia
3. Sydney, Australia
4. Osaka, Japan
5. Calgary, Canada
6. Vancouver, Canada
7. Toronto, Canada
7. Tokyo, Japan
9. Copenhagen, Denmark
10. Adelaide, Australia












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top