மக்கள் வங்கி
தனியார்மயப்படுத்தப்படமாட்டாது
நிதி அமைச்சு தெரிவிப்பு
பாராளுமன்றத்தில்
கொண்டுவரப்பட்டுள்ள மக்கள் வங்கி
திருத்தச் சட்டத்தின்
ஊடாக,மக்கள்
வங்கி ஒருபோதும்
தனியார்மயமாக்கப்படமாட்டாது என நிதி
அமைச்சு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சு
இன்று (03) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மக்கள்
வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட
மூலதனத்தை அதிகரிப்பதற்காகவும்,
திறைசேரியின் அனுமதியின்றி கடன் பத்திரங்களை விநியோகிக்கும்
நோக்கில்,பாராளுமன்றத்தில்
கொண்டுவரப்பட்டுள்ள மக்கள் வங்கி
திருத்தச் சட்டத்தின்
ஊடாக, மக்கள்
வங்கி ஒருபோதும்
தனியார்மயமாக்கப்படமாட்டாது என அரசாங்கம்
வலியுறுத்தியுள்ளது.
1961 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க
மக்கள் வங்கிச்
சட்டத்தின் 13 வது சரத்தின் படி, மக்கள்
வங்கியானது, அரசுடமையாகும். பொது திறைசேரியின் செயலாளர்
வசமே அதன்
பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மக்கள்
வங்கியின் பங்குகளை
கூட்டுறவு சங்கங்களுக்கு
மற்றும் பொது
திறைசேரியின் செயலாளரைத் தவிர வேறு எவருக்கும்
விற்க முடியாது
என, அந்தச்
சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த
வாரம் விவாதத்துக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள
மக்கள் வங்கி
சட்டத்தின் திருத்த வரைபில்,மேலே குறிப்பிடப்பட்டுள்ள
13 வது சரத்து
திருத்தப்படாமையினால், மக்கள் வங்கி
தனியார்மயமாக்கப்படவுள்ளதாகச் சொல்வது முற்றிலும்
பொய்யானது. முன்மொழியப்பட்ட திருத்தங்கள்
மூலம், மக்கள்
வங்கிச் சட்டத்தின்
சரத்து 12, 20, 21 மற்றும் 43 ஆகியன
மட்டுமே திருத்தப்படவுள்ளன.
மக்கள்
வங்கியின் மூலதனத்தை
ஒரு பில்லியன்
ரூபாவிலிருந்து 50 பில்லியன் ரூபாவாக
மாற்றுவதற்கும், ஏனைய அரச வங்கிகளைப் போன்று,
மக்கள் வங்கிக்கும்
திறைசேரியின் அனுமதியின்றி கடன் பத்திரங்களை விநியோகிப்பதற்கான
வழிவகைகளை ஏற்படுத்தி
கொடுப்பதே, இந்த நான்கு பிரிவுகளின் திருத்தங்களுக்கான
முக்கிய காரணியாகும்.
இலங்கை
வங்கி உள்ளிட்ட
ஏனைய அரச
வங்கிகளின் வங்கிச் சட்டங்களின்படி, அந்த வங்கிகளின்
தேவைகளை பூர்த்தி
செய்துகொள்வதற்காக திறைசேரியின் அனுமதி
இல்லாமல் கடன்
பத்திரங்களை விநியோகிக்க கூடிய செயன்முறைகள் தற்பொழுதும்
நடைமுறையில் உள்ளன. இருப்பினும் அந்த வங்கிகள்
தனியார்மயமாக்கப்படுவதாக எந்தவொரு குற்றச்சாட்டுக்களையும்
இதுவரையில் யாரும் முன்வைக்கவில்லை.
மக்கள்
வங்கிச் சட்டத்தின்
திருத்தத்திற்குப் பிறகு, விநியோகிக்கப்படும்
கடன் பத்திரங்களைப்
ஒருபோதும் பங்கு
மூலதனமாக மாற்ற
முடியாது என்பதை
அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஏனென்றால், 1961 ஆம்ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள்
வங்கிச் சட்டத்தின்
13 வது சரத்தில்,
அதற்கான எந்தவொரு
வாய்ப்பும் இல்லை.
மக்கள்
வங்கி சட்டத்தை
திருத்துவதற்கான செயல்முறை 2013ஆம் ஆண்டில் ஆரம்பமானது.
அதன் பிரகாரம்,
மக்கள் வங்கி
சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதன் ஊடாக, மக்கள் வங்கியை
தனியார்மயப்படுத்தப் போவதாக சில
அரசியல்வாதிகளினால் தற்பொழுது மேற்கொள்ளப்படும்
பிரச்சாரங்கள், பொதுமக்களை தவாறாக வழிநடாத்தி, அதன்
மூலம் குறுகிய
அரசியல் இலாபத்தை
ஈட்டிக் கொள்ளும்
முயற்சியேயன்றி, அதில் எந்தவிதமான உண்மைத் தன்மையும்
இல்லை என
அறிவுறுத்தப்படுகிறது.
0 comments:
Post a Comment