சந்திரசிறி
கஜதீரவின் வெற்றிடத்திற்கு
மனோஜ்
சிறிசேன நியமனம்
இலங்கை கம்பியூனிஸ்ட் கட்சியின் மாத்தறை மாவட்டத் தலைவரும்
பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரசிறி கஜதீரவின் மறைவுக்குப் பின் வெற்றிடமாகவுள்ள
பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தென் மாகாண சபையின் முன்னாள் விளையாட்டுத்துறை
அமைச்சர் மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய மாத்தறை மாவட்ட
தேர்தல் தொகுதியின் பட்டியலில் 6வது இடத்தில் இருப்பவர் தேசியபட்டியல் மூலம்
நியமனம் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன என்பதோடு, அதற்கு அடுத்த இடத்தில் உள்ளவர் மனோஜ் பிரசங்க ஹேவாகம்பலகே
சிறிசேன ஆவார்.
அதற்கமைய 8 ஆவது பாராளுமன்றத்திற்கான குறித்த நியமனம்
தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
கடந்த பொதுத் தேர்தலின் முடிவுகளின் படி ஐ.ம.சு.
முன்னணியில் போட்டியிட்ட டலஸ் அழகப்பெரும, காஞ்சனவிஜேசேகர, நிரோஷன் பிரேமரத்ன, மஹிந்த யாப்பா
அபேவர்தன, சந்திரசிறி கஜதீர ஆகியோர் மக்களால்
தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment