கொழும்பு
நகரிலுள்ள காணிகளின் விலை
பாரியளவில்
அதிகரிப்பு
கொழும்பு நகரிலுள்ள காணிகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய
வங்கியின் புதிய தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் தொகுக்கப்படுகின்ற கொழும்பு மாவட்டத்திற்கான காணி
விலைச் சுட்டெண்ணுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில்
உள்ள காணிகளின் விலை 132.2 வீதம்
அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது 13.6 சதவீத அதிகரிப்பினைப் பதிவு செய்துள்ளதாக
மத்திய வங்கி காணி விலைச் சுட்டெண் சுட்டிக்காட்டியுள்ளது.
வதிவிட, வர்த்தக மற்றும்
கைத்தொழில் ஆகிய இந்த மூன்று விடயங்களின் அடிப்படையில் காணி விலை அதிகரிப்பிற்கு
பங்களிப்பு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கைத்தொழில் 14.9 சதவீதத்தினாலும்,
வர்த்தகம் 13.2 சதவீதத்தினாலும், வதிவிடம் 12.8 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளதாக
குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment