ஐக்கிய தேசியக் கட்சியின்
வேட்பாளர் தொடர்பான
இறுதி தீர்மானம் இன்று



ஜனாதிபதி வேட்பாளராக யாரைத் தெரிவு செய்வது மற்றும் யாருடன் கூட்டணி அமைப்பது என்பன குறித்து தற்பொழுது அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

முற்பகல் 10.30 மணியளவில் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தேச கூட்டணி அமைத்தல் குறித்தும் இன்றைய சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் சில பிரதிநிதிகளும் இந்தப் பேச்சுவார்த்தையில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்கும் படி அந்த கட்சியின் 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமொன்றை இதன்போது பிரதமரிடம் ஒப்படைக்க உள்ளதாக அறிவிக்கப்படுகிறது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top