சாய்ந்தமருது
பிரதேசத்திலுள்ள வீதிகளில்
பட்டபகலில் வெளிச்சம் போடும்
தெருலாம்புகள்
சாய்ந்தமருது மக்கள் அரசியல்வாதிகளால்
புறக்கணிக்கப்பட்டு இருளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்
என்பதை உணர்த்துவதற்காக
மாநகரசபை பகலிலும் வெளிச்சம் போட்டு உதவுகின்றார்களா?
மக்கள் இது குறித்து நகைப்பாகப் பேச்சு
கல்முனை
மாநரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீதிகளில் பட்ட பகலிலும் தெரு
லாம்புகள் தொடர்ந்து
எரிந்து கொண்டிருப்பதாக
பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கல்முனை மாநகர சபையின் நிர்வாகச்செயல்பாடும் மக்களால் செலுத்தப்படும்
வரிப்பணம் எவ்வாறெல்லாம்
வீண்விரயம் செய்யப்படுகின்றது என்பதற்கும் பட்ட
பகலிலும் தெரு
லாம்புகள் தொடர்ந்து
எரிந்து கொண்டிருப்பது
ஒரு உதாரணமாகும்
எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இது
விடயத்தில் கல்முனை மேயர் கவனம் செலுத்தவேண்டியது
அவசியம் என
மக்கள் ஏற்கனவே வேண்டுகோள்விடுத்தும் இக்குறைபாடு அடிக்கடி இடம்பெறுவதாக மக்கள் குறை
தெரிவிக்கின்றனர்
நாட்டில்
வரட்சி நிலவும்
நிலையில் மின்சாரத்திற்காக
நாடு சிக்கலை
எதிர்கொண்டிருக்கும்போது கல்முனை மாநகர
சபை எவ்வாறு
மின்சாரத்தை பொடுபோக்குத்தனமாகப் பாவிக்கின்றது
என்பதற்கு கல்முனை மாநகரசபை நிர்வாகத்தினர் பதில் சொல்ல வேண்டிய
கட்டாயத்தில் உள்ளார்கள் அல்லவா?
இது மாத்திரமல்லாமல் சாய்ந்தமருது மக்கள் அபிவிருத்தி இல்லாமலும் இங்குள்ள
மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலும் அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்பட்டு
இருளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் இவர்களுக்கு விடிவு காலம் இல்லை என்பதை
உணர்த்துவதற்காக கல்முனை மாநகரசபை இங்கு பகலிலும் வெளிச்சம் போட்டு உதவுகின்றார்கள்
போலும் என மக்கள் இது குறித்து நகைப்பாகவும் பேசுகின்றனர்.
0 comments:
Post a Comment