மக்கள் பிரதிநிதிகளிடம்
பொதுமக்கள் சார்பான வேண்டுகோள்
சாரதி அனுமதிப்பத்திரமும் மருத்துவ சான்றிதழும்
இன்று அதிகாலை
4.00 மணிக்கு சாய்ந்தமருதில் இருந்து அம்பாரைக்கு 4.45க்குச் சென்றடைந்து Medical எடுப்பதற்கு சென்றபோது இவ்வாறு அதிகாலை
சென்றவருக்கு முன்பே
சுமார் 80 பேர்
வரிசையில் நின்றுள்ளனர்.
நேரம் காலை 6.15 ஆகும் போது
சுமார் 150 பேர் வரை வரிசையில் இதன் பிறகு
வருபவர்களின் நிலை...... ஒரு நாளைக்கு 130 பேர்
மாத்திரம் பரீட்சிக்கப்படுகின்றனர்
ஒவ்வொரு நாளும்
சுமார் 150-200 பேர் சந்தர்ப்பம் கிடைக்காமல் திரும்பிச்
செல்கின்றனர்.
தமது
தொழில்களையும் வேறுவேலைகளையும்
விட்டு வரிசையில்
நின்று சந்தர்ப்பமும்
கிடைக்காது அம்பாரைக்கோ அல்லது மட்டக்களப்பு Medical Center க்கோ சென்று
திரும்ப வேண்டியுள்ளது
.
இத்தனைக்கும் 8.30 மணிக்குத்தான் நிலையம் திறக்கப்படுகிறது அவ்வாறு காத்திருந்தும் ஏதாவது குறைபாடு
இருந்தால் மீண்டும்
அலைய வேண்டிய அவல நிலை.
இதுதவிர மாவட்டத்துக்கு
ஒரு மருத்துவ
நிலையம் மாத்திரமே உள்ளது என்பதனாலேயே
இந்த அவல
நிலை கரையோர மக்களுக்கு தொடர்கின்றது.
இது விடயத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும்
அரசியல்வாதிகளும் தலையீடு செய்து
குறைந்தது மாவட்டத்துக்கு
இரண்டு நிலையத்தையாவது
அமைப்பதற்கு உரிய அமைச்சருடன் பேசி பெற்றுத்தர
முன்வர வேண்டும்
என பொதுமக்கள்
வேண்கோள் விடுக்கின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.