குழந்தை உயிரிழந்தமை தொடர்பில்
வைத்தியர் ஷாபிக்கு எதிராக
அத்துரலியே ரத்ன தேரர் முறைப்பாடு



குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சியாப்தீன் மொஹமட் ஷாபி கடந்த 2018 ஆம் ஆண்டு செய்த சிசேரியன் சத்திர சிகிச்சையின் பின்னர் குழந்தை ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியர் ஷாபி பொறுப்புக்கூற வேண்டும் என அத்துரலியே ரத்ன தேரர் நேற்று பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

இதன்போது வெட்டுகாயங்களுடன் உயிரிழந்த குழந்தையின் புகைப்படத்தை அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

மங்களிகா எனும் பெண் குழந்தையை பெற்றெடுத்து முதல் நாள் குழந்தைக்கு பாலூட்டியதாகவும் இரண்டாம் நாள் குழந்தைக்கு இருதய நோய் காரணமாக சாதாரண வாட்ர்ட்டில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் நாள் குறித்த குழந்தை உயிரிழந்ததாகவும் சவப்பொட்டியில் வைக்கப்பட்டிருந்த குழந்தையின் காலில் கட்டப்பட்டிருந்தது என்வென்பது தொடர்பில் பெற்றோர்கள் அவதானித்த போது அங்கு வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மரணம் தொடர்பில் இரண்டு அறிக்கைகள் இருப்பதாகவும் அவை இரண்டும் ஒன்றுக் ஒன்று மாறுபட்டு இருப்பதாகவும் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்த போதும் அவர்கள் முறைப்பாட்டை பாரமெடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top