போரா மகாநாட்டுடன்
சுற்றுலா தொழிற்துறையை
மேலும் மேம்படுத்த திட்டம்
போரா மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வந்துள்ள 23,000 க்கும் மேற்பட்ட போரா மக்களுக்காக விஷேட சுற்றுலா வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதில் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சுற்றுலா தொழிற்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் வீழ்ச்சி கண்டிருந்த எமது நாட்டின் நம்பிக்கையை சர்வதேச ரீதியில் கட்டியெழுப்புவதற்கும், சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு இந்த மகாநாடு பாரிய பின்புலமாக அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தற்பொழுது நடைபெறும் போரா மகாநாடு தொடர்பாக நாட்டிலுள்ள போரா சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இம்ராம் பகூர்தீன் கருத்து தெரிவித்துள்ளார்.
எமது மதத்தில் அடிப்படை வாதம் என்பதில்லை. நாட்டுக்கு நாம் எவ்வாறு உதவ வேண்டும் என்பது குறித்தும் ஏனைய இனத்தவர்களுடன் எவ்வாறு புரிந்துணர்வுடன் செயற்படுவது என்பது தொடர்பிலான எதிர்பார்ப்புடன் தான் இந்த மகாநாட்டை நாம் நடத்துக்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment