கொழும்பு தாமரைக் கோபுரம்
ஜனாதிபதி தலைமையில்
திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளது.
நாட்டின் தொலைத் தொடர்புத் துறையில்
புதிய பரினாமம்
கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதி தலைமையில் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளது.
இந்த தாமரைக் கோபுரம் நாட்டின் தொலைத் தொடர்புத் துறையில் புதிய பரினாமமாக அமையுமென இலங்கை ரெலிகொம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோபுரத்தில்; பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வானொலிச் சேவையை முன்னெடுத்துள்ள 50 நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி சேவைகளை முன்னெடுத்துள்ள 50 நிறுவனங்களுக்கு இதன் மூலம் நன்மைகள் கிடைக்கவுள்ளன.
கொழும்பு டி.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளது.
தெற்காசியாவில் அதிக உயரமான கட்டடமாக இது உள்ளது. 350 மீற்றர் உயரம் கொண்ட இக்கட்டடம் உலகில் உள்ள 40 மிக உயரமான கட்டடங்களில் ஒன்றாக உள்ளது. சீனாவின் எக்சிம் வங்கியின் நிதி உதவியில் சுமார் பத்துக் கோடி அமெரிக்க டொலர் செலவில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்பு தொழில்நுட்பங்களுக்கு மேலதிகமான இதில் வர்த்தக நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தாமரைக் கோபுரத்திற்காக நினைவு முத்திரை ஒன்றை வெளியிடுவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 45 ரூபா பெறுமதியான இந்த முத்திரை எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.
0 comments:
Post a Comment