முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
ஹக்கீம் அவர்களே…!
உங்களிடம் ஒரு கேள்வி?
ஒரு தகப்பனாக இருந்து உங்கள் பிள்ளைங்களுக்கு செய்யவேண்டி கடமைகளை ஊரையும் உலகத்தையும் கூப்பிட்டு திருவிழா நடாத்தி செய்து முடித்துவிட்டீர்கள்....
ஆனால் இவ்வளவும் செய்வதற்கு உங்களை தலைவனாக்கி உங்களை யாரென்று இந்த உலகத்திற்கே அடையாளப்படுத்தி பெருமையும் புகழும் தேடித்தந்த உங்கள் சமூகத்திற்கு... அதிலும் குறிப்பாக முஸ்லிம் காங்கிரசை ஈன்றெடுத்த கிழக்கு மண்ணுக்கு இதுவரைக்கும் நீங்கள் உருப்படியாக எதை செய்திருக்கின்றீர்கள் என்று உங்கள் மனச்சாட்சியிடம் ஒரு நாளாவது கேட்கத்தோன்றவில்லையா?
மணவறையில் உங்களை புகழ்பாட ஆயிரம்பேர் வரலாம் ஆனால் மண்ணறையில் உன்னை புகழ்பாட நீங்கள் செய்த நல் அமல்களைத்தவிர எவரும் வரமாட்டார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.....
இலங்கை அரசியலினை கலக்கிய மர்ஹும் பதுர்டீனை மஹ்மூத், ஏ.சி.எஸ்.ஹமீட், டொக்டர் ராசிக் பரீட், பாக்கீர் மார்க்கார் உட்பட, ஏன் உங்களுக்கு தேசிய பட்டியலினை காணிக்கையாக போட்டு உங்களை பாராளுமன்ற கதிரையில் உட்கார வைத்த பெரும் தலைவர் அஸ்ரப் கூட இவ்வாறு அனாச்சாரமாக, பணத்திமிருடன், வீன் விரயத்தின் சாதனையாளனாக நாகரீகம் என்ற வகையில் மணவறையில் தங்களது வாரிசுகளை உட்கார வைக்கவில்லை. ஏன் என்றால் அவர்கள் அரசியலுக்கு வந்து கோடீஸ்வரனாகவில்லை.
முஸ்லிம் காங்ரஸ் தலைவர் அப்துர் ரவூப்பே.! இந்த விருந்துக்கு எத்தனை ஏழைகளை அழைத்திருந்தீர்கள்? அல்லது உங்களுக்காக அல்லாஹு அக்பர் கூறி உங்களை அவர்களுடைய பிரதேசத்தில் தோலில் சுமந்து செல்லும் எத்தனை போராளிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தீர்கள்.?
'எந்த விருந்துக்கு செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழை எளியவர்கள் மறுக்கப்படுகிறார்களோ அவர் அல்லாஹ்வுக்கும், அவர் தூதருக்கும் மாறு செய்தவராவார்' என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்களே.! உங்களுக்கு அதெல்லாம் ஞாபகம் வராதோ.?
ஜாமாத்தே இஸ்லாமியின் பாசறையில் வளர்க்கப்பட்டவர் என பீத்திக்கொள்ளும் நீங்கள் ஹஜ்ஜுல் அக்கபர் விடுதலைக்காக கல்முனை ஹரிஸ் குரல் கொடுத்த நிலையில் நீங்கள் மெளனமாக இருக்கின்றது ஒரு புறமிருக்க,…இவ்வாறு பணத்திமிருடன் உங்களையே மறந்து முஸ்லிம்களின் கட்சியின் பெயரினால் கிடைத்த சகல செளபாக்கியங்களையும் அல்லாஹ்வுக்கும், றசூலுக்கும் பொருந்தாதவகையில் தங்களது புதல்வியின் திருமணத்திற்காக நாகரீகம் என்ற வகையில் வீண்விரயம் செய்வததை பற்றி உங்களுக்கு இந்த வயதில் கூட கவலை வரவில்லையா.?
கடையியாக அப்துர் ரவூப் அவர்களே..! நானும் பார்த்துத்தான் வருக்கின்றேன் .. இந்த திருமணத்திற்காக ஒரு மாதகாலமாக வெளி நாடு, உள் நாடு, இராஜதந்திரிகள், பெரும்புள்ளிகள் என விமாணங்கள் மூலம் பறந்து திறிந்து இன்று முடித்து வைத்திருக்கும் நீங்கள் உங்களை தலைவனாக ஏற்று பதினைந்து வருடங்களாக ஏமாற்றம் அடந்து வரும் கிழக்கு முஸ்லிம்களுக்காகவும், முஸ்லிம் சமூகத்துகாக வேண்டியும் ஒரு நாளாவது 24 மணிநேரம் சேவையாறியூள்ளீர்களா.? அல்லது. சிந்திருப்பீர்களா.? என்பதனை உங்களை இதையத்தில் கையினை வைத்து ஒரு தடவையாவது கேட்டுப்பாருங்கள் ஹக்கீம்.
கிழக்கு மக்களை இனியும் ஏமாற்றாதீர்கள், மாடாக கருதாதீர்கள், ஒரு மணிதன் இந்த உலகில் பிறந்து எதனை அடைந்து தனது குடும்பந்துக்காக செய்ய வேண்டுமோ.! அத்தனையினையும் அல்லாஹ்வின் நாட்டத்தோடு, முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி உங்களின் கற்பனைக்கு மேலாகவே தந்துள்ளது. அதனை நீங்கள் எதற்காக.? எவ்வாறுபயன்படுத்தியுள்ளார்கள்.? என்பதனை நாட்டு மக்களும், உலகமும் அறிந்தாலும் கூட அதற்காக தீர்ப்பினை தறப்போகின்றவன் அல்லாஹ்தான் உங்களுக்கு.. இனியாவது வாக்களிக்கும் கிழக்கானுக்கும், முஸ்லிம் சமூகத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் அல்லாஹ்வை பயந்து நடந்து கொள்ளுங்கள்.
இப்படிக்கு ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்.
0 comments:
Post a Comment