40 வருட அரச சேவையில் இருந்து
ஓய்வு பெற்றுகொண்டார்
ஏ.எல்.முஹம்மத் முக்தார்
சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட ஏ.எல். முஹம்மத் முக்தார்
தனது 40 வருட அரசாங்க சேவையில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார்.
1979 ம் ஆண்டில் அரச சேவையில் ஒரு சாதாரண ஆசிரியராக இணைந்து பின் ஒரு தராதர பத்திரமுள்ள ஆசிரியராகவும் பின்னர் பட்டதாரி ஆசிரியர் ஆகவும் கடமையாற்றிய இவர் 1999 ம் ஆண்டு இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு 2010 ம் ஆண்டு SLEAS-II க்கு பதவி உயர்த்தப்பட்டார்.
இவர் தனது ஆசிரியர் சேவையை நிந்தவூர்-04ம் குறிச்சி G.M.M.S.பாடசாலையில் ஆரம்பித்து கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் முடித்துக்கொண்டார்.
SLEAS நியமனத்திற்கு பின்னர் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பட்டிருப்பு, கிண்ணியா, அம்பாறை ஆகிய கல்வி வலயங்களில் 20 வருடங்களாக கடமையாற்றியுள்ளார்.
இவரின் ஆசிரியர் சேவையில் ஒரு தொழிற்சங்கவாதியாக 1988 ல் சிறி லங்கா பட்டதாரி ஆசிரியர் சங்கம் எனும் சங்கத்தை உருவாக்கி மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மூலம் பட்டதாரி ஆசிரியர் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க பாடுபட்டார்.
இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் என்றொரு தொழில் சங்கத்தை ஆரம்பித்து கிழக்கு மாகாண கல்வித் துறையில் இடம்பெறும் ஒழுங்கீனம், முறைகேடுகள், பாரபட்சங்கள் என்பன பற்றி வெளிக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஏ.எல்.எம். முக்தார் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவரது கல்விச் சேவையை தொடர எண்ணியுள்ளார்.
இவரது கல்வி. சமூக சேவைகள் தொடர வாழ்த்துவோம்.
0 comments:
Post a Comment