திகாமடுல்லவில்
5 இலட்சத்து 3ஆயிரத்து 790 பேர்
வாக்களிக்கத்
தகுதி
தபால்
மூலம் வாக்களிக்க 26,096 விண்ணப்பம்
1,861விண்ணப்பங்கள்
நிராகரிப்பு
நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் திகாமடுல்ல தேர்தல்
மாவட்டத்தில் இம்மாதம் 4ம் திகதியுடன் முடிவடைந்த தபால் வாக்கு விண்ணப்பங்கள்
ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதி வரை 26096விண்ணப்பங்கள் இம்மாவட்டத்தில்
இருந்து கிடைத்துள்ளதாக அம்பாறை மாவட்ட தேர்தல் திணைக்களத்தின் உயர் அதிகாரி
ஒருவர் தெரிவித்தார்.
இதன்படி அம்பாறை தொகுதியிலிருந்து கிடைத்த
15641விண்ணப்பங்களுள் 1098நிராகரிக்கப்பட்டதாகவும் சம்மாந்துறை தொகுதியிலிருந்து
கிடைத்த 2448விண்ணப்பங்களுள் 150 விண்ணப்பங்களும் பொத்துவில் தொகுதியிலிருந்து
கிடைத்த 5701ப்விண்ணப்பங்களுள் 522 விண்ணப்பங்களும் கல்முனை தொகுதியிலிருந்து
கிடைத்த 2306 விண்ணப்பங்களுள் 91 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும்
அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
உரிய முறையில் வாக்காளர் தொடர் இலக்கம், மற்றும் வீட்டிலக்கம், தேர்தல் மாவட்டம் என்பன
குறிப்பிடப்படாமையினாலும் பிந்தி கிடைத்தமையினாலுமே குறித்த விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலிருந்து 24235
தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும்
தெரிவித்தார்.
இதேவேளை, திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில்
5 இலட்சத்து 3ஆயிரத்து 790 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அம்பாறை தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்து 74ஆயிரத்து
421பேரும்
சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 88 ஆயிரத்து 217 பேரும்
கல்முனை தேர்தல் தொகுதியில் 76 ஆயிரத்து 283 பேரும்
பொத்துவில் தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்து 64 ஆயிரத்து 869
பேரும் இவ்வாறு வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்
77ஆயிரத்து 681 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
2009 ஆம் ஆண்டு அம்பாறை தேர்தல் தொகுதியில் 146835 ஆக
இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை 27586 பேர்
அதிகரித்து தற்போது 174421 ஆக உள்ளது.
2009 ஆம் ஆண்டு சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 72881 ஆக
இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15336 பேர் அதிகரித்து தற்போது 88217 ஆக உள்ளது.
2009 ஆம் ஆண்டு கல்முனை தேர்தல் தொகுதியில் 66971 ஆக இருந்த
வாக்காளர்கள் எண்ணிக்கை 9312 பேர் அதிகரித்து தற்போது 76283 ஆக உள்ளது.
2009 ஆம் ஆண்டு பொத்துவில் தேர்தல் தொகுதியில் தொகுதியில்
139422 ஆக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை
15447 பேர் அதிகரித்து தற்போது 164869 ஆக உள்ளது.
0 comments:
Post a Comment