மேம்பாலம் இடிந்து விழுந்து 6 பேர் பலி
- தைவானில் சம்பவம்

தைவான் நாட்டில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தைவான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இலன் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தை நகரத்தோடு இணைக்கும் விதமாக மேம்பாலம் ஒன்று உள்ளது.

இந்நிலையில், அந்த மீன்பிடி துறைமுகத்தை இணைக்கும் விதமாக இருந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரி மற்றும் பாலத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் நொறுங்கின. இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் பாலத்தின் இடிபாடுகளில் சிக்கி மீன்பிடி படகில் இருந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறிந்த விசாரணை நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top